பிரபல பின்னணி பாடகர் கே.கே மாரடைப்பால் காலமானார்- தலைவர்கள் இரங்கல்

பிரபல பின்னணி பாடகர் கே.கே மாரடைப்பால் காலமானார்- தலைவர்கள் இரங்கல்
X

கிருஷ்ணகுமார்‌ குன்னத்

பிரபல பின்னணிப் பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், மாரடைப்பால் காலமானார்.

புகழ் பெற்ற பாடகராக திகழ்ந்தவர் கே.கே என்கிற கிருஷ்ணகுமார்‌ குன்னத், வயது 53. இவர், கொல்கத்தாவில் உள்ள பிரபல கல்லூரியில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின்னர், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது; மயங்கி சரிந்து விழுந்த அவரை, கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னணி பாடகர் கே.கே.வை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பு ஏற்பட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது, அவரது ரசிகர்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. டெல்லியில் வசித்து வந்த பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்திற்கு, அவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ஏராளமான பாடல்களை, கே.கே. பாடி இசை ரசிகர்களை வசீகரித்துள்ளார். தனது வசீகரிக்கும் மென்மையான குரலால், தமிழில் ஏராளமான காதல் பாடல்களை பாடியுள்ளார்.

குறிப்பாக, 'மின்சார கனவு' படத்தில் 'ஸ்ட்ராபெரி கண்ணே' பாடல் இவரை தமிழ் ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது. 'காக்க காக்க' படத்தில் உயிரின் உயிரே, 'அந்தியன்' படத்தில் அண்டங்காக்கா கொண்டக்காரி, கில்லி படத்தில் அப்படி போடு போடு, மன்மதன் படத்தில் காதல் வளர்த்தேன், 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் நினைத்து நினைத்து பார்த்து உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!