மகேஷுக்கு சென்ற ஃபோன் கால்! மாட்டிக்கொண்ட அன்பு, ஆனந்தி!

மகேஷுக்கு சென்ற ஃபோன் கால்! மாட்டிக்கொண்ட அன்பு, ஆனந்தி!
X
சிங்கப்பெண்ணே சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

சிங்கப்பெண்ணே சீரியல் புரோமோ | Singapenne serial today promo

சிங்கப்பெண்ணே சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். தொடர் அப்டேட்டுக்கு இந்த டெலிகிராம் சேனலில் இணையுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணைய

சிங்கப்பெண்ணே சீரியல் இன்றைய எபிசோட் | singapenne serial written update

ஆனந்தியும் அன்புவும் குடோனில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வீடு திரும்ப நினைக்கிறார்கள். அந்த நேரத்தில் அரவிந்த் அவர்களை உள்ளே வைத்து பூட்டிவிட்டு தனது திட்டத்தை நிறைவேற்ற நினைக்கிறான். சொன்னது போலவே பூட்டை போட்டுவிட்டு வெளியே பூட்டை உடைக்காத அளவுக்கு செட்டப் செய்துவிட்டு சென்றுவிடுகிறான். இதை எதுவும் அறியாத ஆனந்தியும், அன்புவும் கணக்கு எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். பூட்டியதோடு நிறுத்தாமல் வெளியில் மிகவும் கடினமான ரேக்குகள் கட்டைகளை அடுக்கி உள்ளே இருந்து தள்ளினாலும் உடைக்க முடியாதபடி செட்டப் செய்து வைத்துவிட, அரவிந்த் தன் திட்டம் இனி நடந்துவிடும் என்று சிரித்தபடியே தனக்கு சபாஷ் போட்டுக்கொண்டு நகர்கிறான்.

அரவிந்த் அடுத்து ஹாஸ்டலுக்கு சென்று கொண்டிருக்கும் மித்ராவுக்கு ஃபோன் செய்து, தன் திட்டத்தை சிறப்பாக செய்துவிட்டேன். போட்ட திட்டம் சரியாக நடந்துகொண்டிருக்கிறது. ஹாஸ்டலில் ஆனந்தி எங்கே என்று கேட்டால் தானே சமாளித்துவிடுவதாக மித்ரா சொல்கிறாள். தான் மித்ராவை டின்னருக்கு ஹோட்டல் போக நினைக்க அதை அப்படியே கட் செய்து மித்ரா எஸ்கேப் ஆகிறாள்.

நந்தாவை விட்டு போட்ட திட்டத்தில் ஆனந்தி எப்படியோ எஸ்கேப் ஆகிவிட்டாள். ஆனால் இந்த முறை ஆனந்தியும் அன்புவும் வசமா மாட்டிக்கிட்டீங்க என நினைக்கிறாள் மித்ரா. இனி இதிலிருந்து தப்பிக்கவே முடியாது என்கிறாள். அந்த நேரத்தில் ஆனந்தியின் தோழிகள் அங்கே ஹாஸ்டலில் டின்னருக்கு போக திட்டமிடுகிறார்கள்.

உடையில் எது பெஸ்ட் என தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் காயத்ரி கொஞ்சம் அப்செட்டாக இருக்கிறாள். அவளுக்கு ஆனந்தி இன்னும் வரவே இல்லையே என கவலைப்படுகிறாள். அந்த நேரத்தில் மித்ரா அங்கே தனது திட்டத்தை செயல்படுத்துகிறாள்.

ஏற்கனவே வார்டன் 9 மணி வரைதான் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். இப்பவே 8 மணி ஆகிடிச்சி இனி அவ வந்து புறப்பட்டு போயிட்டு வரதுக்கே டைம் இல்லையே என மூவரும் அச்சப்படுகிறார்கள்.

மித்ரா தனக்கு கால் வந்தது போல நடித்து, ஹலோ கேட்குதா ஆம் ஓகே ஓகே என சொல்லி, தான் ஏற்கனவே ஹாஸ்டல் வந்துவிட்டதாக அவர்களுக்கு உணர்த்துகிறார். காயத்ரி கவலைபட, சீக்கிரம் வந்துவிடுவாள் அவள் என சல்மா சொல்லிக்கொண்டு செல்கிறாள்.

மித்ரா தனது ஆணவத்தை காட்டுகிறாள். விடிய விடிய ஆனந்திய தேடி அலைய போறீங்க என்று சொல்கிறாள்.

அங்கே அலுவலகத்தில் ஒரு வழியா முடிஞ்சிதுங்க சந்தோஷம் என ஆனந்தி பேச, ஏங்க இதுக்குல்லாம் இவ்ளோ சந்தோஷமா என அன்பு கேட்க, இருவரும் வெளியில் வரலாம் என அறைக்கதவை திறக்கிறார்கள். ஆனால் அந்த கதவு வெளியில் பூட்டப்பட்டிருக்கிறது. அதிர்ச்சியடைகிறார்கள். பதற்றமடைகிறார்கள். திறக்கவே முடியவில்லை. ஆனந்தி ரொம்பவே பயப்பட ஆரம்பிக்கிறார். ஆனால் அன்பு அவரை சமாதானப்படுத்திகிறார்.

யாராவது இருக்கீங்களா செக்யூரிட்டி அண்ணன், கருணாகரன் என அனைவர் பெயரையும் கூப்பிட்டு பாத்தும் பலனில்லை. பதற்றத்தில் ஆனந்தி தாங்கள் குடோனில் மாட்டிக்கொண்டதாக தெரிவிக்கிறார். யாருமில்லை என்றான பிறகு எப்படியாவது இந்த குடோனிலிருந்து தப்பிக்க நினைக்கிறார்கள்.

இதற்காகத்தான் சொன்னேன் நீங்க சீக்கிரமாவே போங்கன்னு இப்ப நீங்களும் என்னால மாட்டிக்கிட்டீங்க என அன்பு சொல்கிறான். ஆனால் ஆனந்தி நல்ல பக்குவத்துடன் முதலில் இங்கிருந்து வெளியில் செல்வதை குறித்து யோசிப்போம்.மற்ற விசயஙஅகளை பின்னர் பார்த்துக்கொள்வோம் என்கிறாள். இருவரும் மீண்டும் கதவை தட்ட ஆரம்பிக்கிறார்கள்.

ஹாஸ்டலில் காயத்ரி ரொம்பவே பரிதவிக்கிறாள். இதற்கு மேலும் சரிபட்டு வராது நிச்சயமாக இதனை நாம் வார்டன் மேமிடம் சொல்லிவிட வேண்டும். ஆனந்தி லைஃபில் என்னவெல்லாம் நடக்கிறது அவளுக்கு எத்தனை பிரச்னைகள் இதெல்லாம் தெரிஞ்சும் நாம எப்படி பயப்படாம இருக்கறது என காயத்ரி சொல்ல, அந்த நேரத்தில் சல்மா ஆனந்திக்கு கால் செய்கிறாள். கால் வருவதை உணர்ந்த ஆனந்தி ஏதோ சத்தம் கேட்பதாக அன்புவிடம் சொல்கிறாள்.

அது மொபைல்தான் என்பதை புரிந்துகொண்டு, தன்னுடைய ஃபோன்தான் அடிக்கிறது. என்னய காணோம்னு ஃபோன் அடிக்கிறாய்ங்கனு நினைக்குறேன். வார்டன் மேடம் பதற்றமாகி என்னய தேடி அலையுறாங்கன்னு நினைக்கிறேன் என்கிறாள் ஆனந்தி. அன்புவும் அவளை சமாதானப்படுத்திவிட்டு கதவை உடைக்க முயற்சிக்கிறான் அன்பு.

காயத்ரி புத்திசாலித்தனமாக ஏதாவது பிரச்னையாகி அது சீரியஸ் ஆகுறதுக்குள்ள வார்டன் மேம்கிட்ட சொல்லறதுதான் நல்லது என மூவரும் வார்டன் மேம் ரூமுக்கு செல்கிறார்கள்.

வார்டன் தான் ரெடி ஆகிவிட்டதாகவும் நீங்கள் இப்பதான் வரீங்க. ஆமா ஆனந்தி எங்கே என கேட்கிறாள். அதற்கு பதற்றமடையும் மூவரும் ஆனந்தி இன்னும் வரவில்லை என்று சொல்ல, வார்டனுக்கும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. அந்த நேரத்தில் அங்கு மித்ரா தன் தோழிகளுடன் வருகிறாள். நடப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனந்திக்கு இன்பார்ம் பண்ணீங்களா என வார்டன் கேட்க, அவகிட்டதான் பர்ஸ்ட் சொன்னோம். சீக்கிரம் கிளம்பி வர்றதா சொன்னவ இப்ப வர வரல. ஃபுல் ரிங் போயும் அவ ஃபோன எடுக்கல என்று சொல்லிவிட்டு பயமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். வார்டனும் அவர்களை சமாதானப்படுத்திவிட்டு ஆனந்திக்கு ஃபோன் செய்கிறாள்.

ஆனால் அப்போதும் ஃபோனை எடுக்கவில்லை. அவளும் அன்புவும் குடோனில் மாட்டிக்கொண்டுள்ளனர். எப்படியோ வெளியில் சென்று விடலாம் என அன்பு கதவை உடைக்க முயற்சிக்கிறான். ஆனால் முடியவில்லை.

இங்கே மித்ரா ஜாலியாக இருக்கிறாள். தோழிகளும் மகிழ்கிறார்கள். அப்போது மித்ராவை வார்டன் பார்த்துவிட்டு அழைக்கிறார்கள்.

சிங்கப்பெண்ணே சீரியல் இன்றைய எபிசோட் | singapenne serial update today

மித்ரா உள்ளே வருகிறாள். மித்ராவிடம் அவர்களது கம்பெனி குறித்தும் வேலைப்பளு குறித்தும் கேட்கிறார் வார்டன். எல்லாரும் போன பிறகுதான் தான் ஹாஸ்டலுக்கு வந்ததாகவும் கூறுகிறாள் மித்ரா. ஆனந்தி இன்னும் வரவில்லையா என தெரியாதது போல நடிக்கிறார்கள் மித்ராவும் தோழிகளும். வழக்கமா 5 மணிக்கே முடிந்துவிடும். அதேபோல இன்னைக்கும் முடிஞ்சிடிச்சே. எல்லாரும் வீட்டுக்கு போன அப்றம்தான் நானே வீட்டுக்கு வந்தேன் என்கிறாள் மித்ரா.

ஆனந்தி இன்னும் வரவில்லை என்பதை அதிர்ச்சியடைவது போல நடிக்கிறார்கள். ஓவர்டைம் இல்லை என்கிறாய் இவள் ஃபோனையும் எடுக்க மாட்டேங்குறா என புலம்ப, மித்ராவின் தோழியில் ஒருத்தி ஆனந்தியை தப்பாக சொல்கிறாள். அழகன்னு லெட்டர் போட்டா பின்னாடி போயிடுவா என அவள் சொல்ல, உடனே சல்மா, காயத்ரி, ரெஜினா மூவரும் கடுப்பாகிறார்கள். உடனே அவர்கள் எகிறி பதிலடி கொடுக்க நினைக்கிறார்கள். இதனால் இருவருக்குள்ளும் மோதல் நிலை உருவாகிறது.

சிங்கப்பெண்ணே சீரியல் இன்றைய எபிசோட் | singapenne serial today episode

இருதரப்பும் வாய்வார்த்தைகளில் மோதிக்கொள்கிறார்கள். அதனால் வார்டன் கோபமடைந்து கத்துகிறார். இது என்ன ஹாஸ்டல்னு நினச்சீங்களா? வேற மாதிரி இடமா. நீங்களே ஏன் ஆனந்தி குறித்து மட்டமா பேசுறீங்க. ஆனந்திய மட்டும் இல்ல இதுக்கப்றம் ஹாஸ்டல் ல இருக்கற வேற ஏதாவது ஒரு பொண்ணு பத்தி தப்பா பேசுனீங்க இனி அவ்ளோதான். என மிரட்டி அவர்களை அனுப்பிவிடுகிறார் வார்டன். இந்த எச்சரிக்கை அவர்களுக்கு மட்டுமில்ல உங்களுக்கும்தான் என மனோன்மணி வார்டன் சொல்ல, அவர்களும் ஸாரி சொல்கிறார்கள்.

வார்டனிடம் ஆனந்தியை எப்படி கண்டுபிடிக்க என்று கேட்க, வார்டன் பதில் சொல்லாமல் ஃபோனை எடுக்கிறாள். மறுமுனையில் மகேஷ் ஃபோனை எடுக்க, அவரிடம் ஆனந்தியைக் காணவில்லை என சொல்ல மகேஷும் பதற்றமடைகிறான்.

ஆனந்தி வேலைல இருந்து இன்னமும் திரும்பி வரல என்று சொல்ல, மகேஷ் இன்னும் வரலையா என அதிர்ச்சியடைகிறான். மகேஷை ஹாஸ்டலுக்கு வரவழைக்கிறாள் வார்டன். மகேஷும் அவசரமாக கிளம்பி ஹாஸ்டலுக்கு வருகிறான். அங்கே குடோனில் ஆனந்தியும் அன்புவும் கதவை உடைத்து எப்படியும் வெளியே வந்துவிடலாம் என நினைக்க, அந்த நேரத்தில் அன்புவுக்கு அடிபடுகிறது.

அன்பு இன்னும் இடித்தால் துறந்துவிடும் என சொல்ல ஆனந்தி பக்குவமாக, உங்களுக்கு ஏதும் ஆகிவிட்டால் அது இன்னும் சிக்கலாகிவிடும் என்று சொல்கிறாள். அந்த நேரத்தில் அன்புவுக்க ஏதோ ஒரு பொறி தட்டுகிறது.

சிங்கப்பெண்ணே நேற்றைய எபிசோட் | singapenne serial yesterday episode

விரைவில் அப்டேட் செய்யப்படும்

Tags

Next Story
ai powered agriculture