முத்துவுக்கு தெரிந்த உண்மை! மாட்டிக்கொண்ட அன்பு..!

முத்துவுக்கு தெரிந்த உண்மை! மாட்டிக்கொண்ட அன்பு..!
சிங்கப்பெண்ணே சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

சிங்கப்பெண்ணே சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். தொடர் அப்டேட்டுக்கு இந்த டெலிகிராம் சேனலில் இணையுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணைய

சிங்கப்பெண்ணே சீரியல் இன்றைய எபிசோட் | singapenne serial written update

நீயும் எங்க வீட்ல ஒருத்தர்தாம்மா வா வந்து உக்காரு என ஆனந்தியை உக்காரச் சொல்கிறாள் அம்மா. அன்புவும் ஆனந்தியும் ஒரே இலையில் அருகருகே அமர்ந்து சாப்பிடுகிறார்கள். ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொள்கிறார்கள்.

ரெண்டு பேரும் இலையையே பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி? சாப்பிடுங்க என்று சொல்கிறார் அம்மா.

நீங்க எல்லாரும் நான் கூப்பிட்டதுக்காகவும், அன்பு கூப்பிட்டதுக்காகவும் வந்ததுக்கு ரொம்ப நன்றி. இதுல எல்லாருக்கும் ஜாக்கெட் பிட்டும் துணியும் வைத்திருக்கேன் வாங்கிக்கோங்க. ஜெயந்தி நீ முதல்ல வாங்கிக்கோ என்கிறார். ஒவ்வொருவராக வாங்கிக் கொண்டு நன்றி சொல்கிறார்கள்.

அனைவருக்கும் ஜாக்கெட் பிட் குடுத்துவிட்டு, ஆனந்திக்கு எதுவும் குடுக்காமல் இருந்தா தப்பாகிடும்மா என்று அம்மாவின் காதைக் கடிக்கிறான் அன்பு. ஆனால் அன்புவின் அம்மாவுக்கு வேறு ஐடியா இருந்திருக்கிறது. அவளுக்கு மட்டும் புடவை எடுத்து வைத்திருக்கிறாள் அன்புவின் அம்மா.

ஆனந்தியோ தனக்கு எதுக்கு புடவைலாம் என்று சொல்ல, அம்மா நீ எப்படி இழுத்து போட்டு வேலை செஞ்ச, அது மாதிரி நா குடுக்குறேன் வாங்கிக்கோ என்றவுடன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கிறார்.

முத்து தனக்கு ஜீன்ஸ் டி சர்ட் வேண்டும் என்று கேட்கிறான். அனைவரும் விடைபெறுகிறார்கள். முத்துவை மட்டும் நிற்க சொல்கிறார் அம்மா. ஆசிரமத்துக்கு போயி எல்லா பசங்களுக்கும் சாப்பாடு குடுக்க வேண்டும் என்று சொல்ல, முத்துவும் போறேன் என்கிறான்.

அனைவரையும் வீட்டு வாசல் வரை சென்று வழியனுப்பிவைக்கிறாள் அம்மா. ஆனந்தி சைக்கிளில் சென்றுவிடுவார் என மற்றவர்கள் கிளம்பிவிடுகின்றனர். அந்த நேரத்தில் ஆனந்தியை, பக்கத்து வீட்டு காரர்கள் அழைக்கிறார்கள்.

ஆனந்தியை நிற்க வைத்துவிட்டு, அன்புவின் அம்மா லலிதாவிடம் ஆனந்திதான் உன் வீட்டு மருமகளா என கேட்க, பிரளயம் வெடிக்கிறது. இதனால் அன்புவுக்கு தர்மசங்கடம் ஏற்படுகிறது. ஆனால் அன்புவின் அம்மா அதிர்ச்சியடைந்தாலும், அன்புவுக்கு ஏற்கனவே அத்தை மகள் இருக்கிறாள். அவளைத் தான் கல்யாணம் செய்ய இருக்கிறான். ஆனந்தியும் அவ ஊரு ஜனங்கள விட்டுட்டு வந்து இங்க புழைப்புக்காக வேலை செய்திட்டு இருக்கா. ரெண்டு பேரும் அப்படிப்பட்ட புள்ளைங்க இல்ல என சொல்லி முடித்து விடுகிறாள். இதனால் அன்பு வருத்தப்படுகிறான்.

ஆனந்தி நான் நெனச்சது நடந்துடிச்சி. நீ அம்மாக்கிட்ட பேசுனா உன்ன அவங்களுக்கு பிடிச்சிடும்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. இப்ப அந்த நம்பிக்கை இன்னும் அதிகமாகிடிச்சு என அன்பு பேச ஆரம்பிக்க, அந்த நேரத்தில் அவனை யாரோ பின்னிருந்து அழைக்கிறார்கள். அன்பு அதிர்ச்சியடைகிறான்.

சிங்கப்பெண்ணே சீரியல் இன்றைய எபிசோட் | singapenne serial update today

அன்பு டாலரை எடுத்து பார்த்துக்கொண்டிருந்ததை முத்து பார்த்துவிடுகிறான். இதனால் அவன்தான் அழகன் என்பது தெரியவந்துள்ளது.

கையில் மறைத்து வைத்துள்ளது என்ன என்பதை முத்து குடைந்து குடைந்து கேட்கிறான். ஏதாவது சொல்லி சமாளிக்கலாம்னு யோசிக்காத, நான் எல்லாத்தையும் கேட்டுட்டேன். உண்மைய சொல்லு மறச்சி வச்சிருக்கிற செயின குடு என்று வாங்கி பார்க்கிறான்.

என்னடா இதெல்லாம். அப்ப நீதான் அழகனா. ஆனந்தி அழகன் அழகன்னு உயிர குடுத்தது உனக்காகவா. பக்கத்துல இருந்தே கேட்டுட்டு இருந்துருக்கேல்ல. நீதான் அழகனா உண்மையச் சொல்லு.

நீ லவ் பண்ற விசயம் எங்களுக்கு தெரியக்கூடாதுன்னு நினச்சியா. அழகன்னு ஒருத்தன் இருக்கான்னு நம்ப வச்ச. அவள இப்படி ஆக்குன .நந்தானு ஒருத்தன் வந்து இப்படி ஒரு பிரச்னை வேண்டுமா?

ஆனந்திய முதல் முறை பார்த்தப்பவே எனக்கு அவள ரொம்ப புடிச்சிடிச்சிடா. ஆனா ஒவ்வொரு தடவையும் என்ன ஆனந்தி தப்பாவே நினச்சிட்டு இருந்தா. அதனால நா அவ மனசுல நல்ல இடம் பிடிக்க நினச்சேன். ஒரு கட்டத்துல ஆனந்திக்கு என் மேல பயங்கரமான கோபம் வந்துடிச்சி. ஆனந்தியோட அழுக என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிடிச்சு. அப்பதான் ஒரு சைக்கிள கொண்டு வந்து அவ கண்ணீர துடைக்கணும்னு முடிவு பண்ணேன்.

சிங்கப்பெண்ணே சீரியல் இன்றைய எபிசோட் | singapenne serial today episode

அவளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவி செய்ய நினச்சேன். அப்பதான் அவ சைக்கிள கொண்டு வந்து வச்சேன். அவளுக்கு துணையா நான் இருக்கேன்னு சொல்ல தோணிச்சு. ஆனா நான்னு தெரிஞ்சா அவ என்னய ஏத்துக்கமாட்டானுதான் அழகன்னு ஒருத்தன உருவாக்கி, அவன வச்சி ஆறுதல் கொடுத்தேன்.

இந்த நிமிசம் கூட நான்தான் அழகன்னு சொல்லலாம்னுதான் தோணுது. ஆனா நான் எப்படி இத சொல்வேன். உன்கிட்ட சொல்லி அத நீ அவகிட்ட போயி சொல்லிட்டா அவ அழகனையும் வெறுத்துடுவான்னு பயம்தான்.

சிங்கப்பெண்ணே நேற்றைய எபிசோட் | singapenne serial yesterday episode

அன்பு அம்மா - பரவால்லம்மா நான் பாத்துக்குறேன். சரிம்மா நீங்க எல்லாரும் பேசிட்டு இருங்க நா பாத்துக்குறேன்.

யாழினி - அம்மா அவங்க வீட்டு விஷேசத்துக்கு போயி நல்லா வேல பாத்துட்டு வந்தியே

அன்பு அம்மா - அவங்க சொல்றத சொல்லிட்டு போறாங்க. நாம செஞ்சத சொல்லிக்காட்டக்கூடாது.

ஆனந்தி - நா இருக்கேன் மா. வாங்க சமைக்கலாம். இவங்களும் ஒத்தாசைக்கு இருக்காங்க. எங்க ஊர்ல 100 பேருக்கு கூட சமச்சிருக்கேன்.

அன்பு - அம்மா ஆனந்தி நல்லா சமைப்பாம்மா. அவ சமைக்கட்டும்.

அன்பு அம்மா - அப்ப நாம கொல்லைல சமைச்சுக்கலாம்.

ஆனந்தி - சௌந்தர்யா நீ பருப்ப ஊற வை, அக்கா நீங்க அரிசிய ஊற வைங்க

அன்பு - அப்ப நா என்ன செய்ய

ஆனந்தி - நீங்க சும்மா இங்க நில்லுங்க

யாழினி - நானும் இங்க நிக்குறேன்.

அன்பு ஆனந்தி காலை தவறுதலாக மிதித்துவிடுகிறான். அப்போது அவர்கள் கம்பெனியில் வேலை செய்யும் பெண்கள் வருகிறார்கள்.

சமையல் வேலை தடபுடலாக நடந்தேறுகிறது. அனைவரும் பகிர்ந்து வேலையைத் தொடங்கி செய்கிறார்கள்.

அப்போது ஆனந்திக்கு வியர்த்து கொட்டுகிறது. அந்த நேரத்தில் அன்பு தனது கைக்குட்டையை எடுத்து கொடுக்கிறான். பின் அவனே துடைத்து விடுகிறான். அங்கே முத்து தனது பங்குக்கு கலாட்டா செய்துகொண்டிருக்கிறான்.

அன்பு அம்மா - என்ன எல்லாரும் வேலைய சீக்கிரம் முடிச்சிட்டீங்களா. என்ன உங்க எல்லாரையும் வேல வாங்கிட்டோமேன்னு கஷ்டமா இருக்கு.

ஆனந்தி - எங்கள வேற்று ஆளா நினைக்காதீங்கம்மா.

அனைவரும் பூஜையில் கலந்துகொள்கிறார்கள். தீபாராதனை காட்டி அன்பு ஆரத்தியை அனைவருக்கும் கொண்டு நீட்டுகிறான்.

ஆனந்தி - அன்பு நீங்க சாமிகும்புடுற முன்னாடியே குடுக்கலாம்னுதான் எடுத்துட்டு வந்தேன். ஆனா சமைக்குற அவசரத்துல மறந்துட்டேன். என்னால முடிஞ்ச ஒரு சின்ன பரிசு. உங்களுக்கும் அம்மாவுக்கும்.

அன்பு - அம்மா இதோ இத பிரிச்சி பாரு. நான் பக்கத்துலேயே இருக்கேன்.

ஆனந்தி அன்புவின் குடும்ப புகைப்படத்தை வரைந்து அப்படியே கொடுக்கிறாள். இதைப் பார்த்து அப்படியே நெகிழ்ந்து விடுகிறது அன்புவின் குடும்பம்.

அன்பு அம்மா - தொலைஞ்சு போன இந்த குடும்பத்து பொக்கிஷத்த எனக்கு திரும்ப குடுத்துருக்க. உனக்கு சின்ன வயசுன்னாலும், உன் கால்ல விழுந்துடலாம் போல இருக்கு.

ஆனந்தி - நான்தான் உங்க கால்ல விழணும் அம்மா.

அன்பு தன் அப்பா தன்னிடம் பேசுவது போல நினைத்து பார்க்கிறான்.

முத்துவும் சௌந்தர்யாவும் சாப்பாடு குறித்து பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். அதனால் சௌந்தர்யாவை அனைவரும் கலாய்க்கிறார்கள். இப்போது அனைவருக்கும் சாப்பாடு பரிமாறப்படுகிறது.

அனைவரையும் அமர வைத்து சாப்பாடு பரிமாறுகிறான் அன்பு. அவனுக்கு உதவியாக முத்து, ஆனந்தி, ஜெயந்தி ஆகியோரும் பரிமாறுகிறார்கள். அன்புவின் தங்கை யாழினி தனக்கு பசிக்கிறது எனவும், சாப்பிட வேண்டும் எனவும் கேட்க, அன்பு அதற்கு சம்மதிக்கிறான்.

அன்புவும் ஆனந்தியும் முட்டிக்கொள்ள, ஆனந்தியையும் அன்புவையும் பார்த்து முத்துவும், ஜெயந்தியும் பேசிக்கொள்கிறார்கள். அதனை கவனித்த அன்பு அவர்களையும் உக்காந்து சாப்பிடச் சொல்லுகிறான். ஆனந்தியும் அன்புவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

அன்புவின் அம்மா அன்புவை அழைத்து படையல் சாப்பாட்டை சாப்பிடச் சொல்கிறார். அன்பு முழுச்சாப்பாட்டையும் என்னால் சாப்பிட முடியாது என்கிறான் அன்பு. முழுச்சாப்பாட்டையும் சாப்பிட யார் சொன்னது. உன் தங்கச்சி யாழினியை சாப்பிடச் சொல்லு என்று கூறுகிறாள் அம்மா.

Tags

Next Story