நடிகர் மாதவனுடன் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோடியான சிம்ரன்..!

நடிகர் மாதவனுடன் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோடியான சிம்ரன்..!
X

'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' படத்தில் மாதவன் மற்றும் சிம்ரன். 

நடிகை சிம்ரன், 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் மாதவனுடன் ஜோடியாக நடித்ததை அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குநராக நடிகர் மாதவன் அறிமுகமாகியுள்ள 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' என்ற படத்தில் நடிகை சிம்ரன் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோடியாக நடித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகை சிம்ரன் சமூக வலைத்தளத்தில், ''பார்த்தாலே பரவசம்' படத்தில் சிமி மற்றும் டாக்டர் மாதவா, 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் இந்திரா மற்றும் திரு, இப்போது 'ராக்கெட்டரி' படத்தில் நம்பி நாராயணன் மற்றும் மிஸஸ் நம்பி நாராயணன் என இத்தனை வருடங்கள், இத்தனை படங்கள் நடித்ததில் உங்களிடம் எந்த விதமான மாற்றமும் இல்லை. நீங்கள் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நான் நடித்திருப்பதில் மகிழ்ச்சி.

அதோடு 20 வருடங்கள் கழித்து மீண்டும் உங்களுக்கு ஜோடியாக நடிக்கிறேன். நீங்கள் எப்போதுமே சிறந்தவர் மேடி" என பதிவிட்டுள்ளார். நடிகை சிம்ரனின் இந்தப் பதிவு ரசிகர்களிடையே முக்கிய கவனம் பெற்றுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!