ரஜினி நிராகரித்த கதையில் இணையும் சிம்பு - கமல்ஹாசன்!
சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பது ஒருபுறம் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் சிம்பு படத்தை கமல்ஹாசன் இயக்குகிறார் என்கிற தகவல் வந்துள்ளது. இதனால் சிம்பு ரசிகர்களும் கமல்ஹாசன் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இது ரஜினிகாந்திடம் சொல்லப்பட்ட கதை என்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு சிம்பு தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கினார். முதல் வெற்றியாக மாநாடு படத்தையும் இரண்டாவது வெற்றியாக வெந்து தணிந்தது காடு திரைப்படத்தையும் எடுத்து கொடுத்துவிட்டு அடுத்து பத்து தல படத்தையும் முடித்துவிட்டு இப்போது அதை ரிலீஸ் செய்ய உதவி செய்து வருகிறார்.
சிம்பு கேங்க்ஸ்டராக நடித்துள்ள பத்து தல படத்துக்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.. மேலும் சிம்பு யார் யார் இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்கப் போகிறார் என பட்டியலை எடுத்து பார்த்தார் ஒரு நிமிசம் தலையே சுற்றுகிறது.
கௌதம் மேனனுன் வெந்து தணிந்தது காடு 2, விண்ணைத் தாண்டி வருவாயா 2, சுதா கொங்கராவுடன் ஒரு படம், ஏ ஆர் முருகதாஸுடன் ஒரு படம், மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படம் என பலரும் சிம்புவுக்கு கதை சொல்லி காத்திருக்கின்றனர். ஒன்லைன் படமாக மாறுமா அதில் சிம்பு நடிப்பாரா இல்லை வேறு நடிகர்களுக்கு கைமாறுமா என சிம்பு ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்க, லெஃப்டில் கை காட்டி யூடர்ன் போட்டு முதல் ஆளாக வந்து நிற்கிறார் நம்ம தேசிங்கு பெரியசாமி.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி கோலிவுட்டில் நல்ல பெயரைப் பெற்றார். இந்த படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரை நேரில் அழைத்து வாழ்த்தினார். அவரிடம் தனக்கு ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்களேன் என்று கேட்டிருக்கிறார். இயல்பிலேயே அவர் ரஜினி படங்களைப் பார்த்து வளர்ந்த ரசிகர்கள் என்பதால் அவருக்கு ஒரு கதை இருப்பதாகவும் அதை நீங்கள ஓகே சொன்னால் பண்ணலாம் என்று கூறி கதையையும் கூறியிருக்கிறார்.
ரஜினிகாந்த் மும்முரமாக கதையைக் கேட்டுவிட்டு நல்ல கதை, நான் நடிக்கிறேன் என்று கூறிவிட்டாராம். இதனை தேசிங்கு பெரிய சாமியும் அவரது நண்பர்கள், உறவினர்களிடம் கூறி சந்தோஷப்பட்டிருக்கிறார். ஆனால் டிவிஸ்ட் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. காரணம் இது மிகப்பெரிய பட்ஜெட் படம். இதை புதுமுக இயக்குநரை நம்பி எப்படி எடுப்பது என்பதால் லைகா, சன்பிக்சர்ஸ் இருவரும் கைநீட்டிவிட்டார்கள். ஏற்கனவே அண்ணாத்த படம் கையை சுட்டது போதும் இனி அடுத்தும் சுட வேண்டாம் என சன்பிக்சர்ஸும், 2 பாயிண்ட் 0 படத்தில் பாடம் கற்றுக் கொண்ட லைகாவும் கம்முனு இருந்துவிட்டதாம்.
இந்த கதையை கமல்ஹாசன் கேட்டு இதில் சிம்புவை நடிக்க கேட்டிருக்கிறார். உடனே ஓகே சொன்ன சிம்பு சில தினங்களிலேயே கால்ஷீட் ஒதுக்கிவிட்டாராம். விரைவில் படப்பிடிப்புக்கு தயாராகிறது இந்த படம். இந்த படத்தில் கமல்ஹாசனின் பங்கு இருப்பதாக முதலில் தகவல் வெளியான போது இதில் கேமியோ எதுவும் செய்கிறாரா என்று விசாரித்தால், அந்த படத்தின் தயாரிப்பாளரே கமல்ஹாசன்தான் என்கிறார்கள். RKFI தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.
சிம்பு, கமல், தேசிங்கு இணையும் இந்த படத்துக்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் வரிசையாக படங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. சிவகார்த்திகேயன், சிம்பு, கவின் என அடுத்தடுத்து வளர்ந்த, வளர்ந்து வரும், புதுமுக நடிகர்கள் என பாரபட்சம் பார்க்காமல் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu