STR 48ல் சூப்பர் சர்ப்ரைஸ் தரும் சிம்பு!

STR 48ல் சூப்பர் சர்ப்ரைஸ் தரும் சிம்பு!
X
ரஜினிக்காக தேசிங்கு பெரியசாமி எழுதிய ஸ்க்ரிப்டில் இப்போது சிம்பு நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பட நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க பாலிவுட்டிலிருந்து நடிகையைத் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள்.

கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படம் எஸ்டிஆர் 48. இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை என்பதால் கதாநாயகன் சிம்புவின் 48வது படம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஷூட்டிங்கும் விரைவில் நடக்க இருக்கிறது.

இந்த படத்துக்கு பாலிவுட்டிலிருந்து கதாநாயகி வேண்டும் என தீபிகா படுகோனேவிடம் பேச முயற்சி செய்தார்களாம் ஆனால் அவர் இவர்களை துளி கூட மதிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகின. அதேநேரம் இந்த தகவலில் உண்மை இல்லை என இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தெரிவித்துள்ளார். ஆனால் சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சூப்பரான அப்டேட் ஒன்றை தந்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவரது படங்கள் வெற்றி பெறுகிறதோ இல்லையோ அதிக அளவில் சர்ச்சையாக மாறும். இவரது நடவடிக்கைகளாலும் பல முறை இவருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் மீண்டு வந்து இப்போது மிகப் பெரிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

ரஜினிக்காக தேசிங்கு பெரியசாமி எழுதிய ஸ்க்ரிப்டில் இப்போது சிம்பு நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பட நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க பாலிவுட்டிலிருந்து நடிகையைத் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள்.

வரலாற்று படம் என்பதால் இந்த படத்தில் சிம்பு இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மன்மதன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே இதுவரை இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் சிம்பு.

ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் சிம்பு நடிக்கவில்லை என்பது சிம்பு ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த குறையைத் தீர்க்கும் வகையில் இப்போது குதிரை மீது வந்து போர்புரியும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்