சிம்பு இன்னும் அவர மறக்கலையோ? கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்.. இதுதான் சாட்சியாம்!

சிம்பு இன்னும் அவர மறக்கலையோ? கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்.. இதுதான் சாட்சியாம்!
X
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த பாலா மறக்குமா நெஞ்சம் பாட்டை பாடுங்கள் அண்ணா என்று கூற, அவரோ மக்களிடம் என்ன பாட்டு என்ன லூசுப் பெண்ணே வா... சரி ஓகே மக்கள் கேக்குறததான் பாடணும் என்று கூறி பாட ஆரம்பித்தார்.

சிம்பு தன் பழைய காதலை இன்னமும் மறக்கவில்லை எனவும் அவரை நினைத்தேதான் இந்த பாடலை மேடை தோறும் பாடிக் கொண்டிருக்கிறார் எனவும் நெட்டிசன்கள் கிளப்பி விடுகின்றனர். இது தீயாய் பரவ, அவர்கள் சொல்வதுதான் உண்மை போல என நினைக்கும் அளவுக்கு சிம்பு நடந்துகொள்வதும் அதனை எடிட் செய்து இணையதளத்தில் பரப்புவதுமாக தொடர்கிறது இந்த வேலைகள்.

சிம்பு வளர்ந்து வரும் சூழலில் அவருக்கு உச்ச நடிகர் மகளின் மீது காதல் இருந்ததாகவும் பின்னர் அவருக்கு திருமணம் முடிந்துவிட்டதால் சிம்பு அவரை விட்டு விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர் சிம்புவின் வாழ்க்கையில் பல பெண்கள் வந்தாலும் நயன்தாரா அளவுக்கு யாரும் சிம்புவைக் கவரவில்லை. அந்த அளவுக்கு இவர்களின் காதல் கோலிவுட் தாண்டியும் பேசப்பட்டு வந்தது. பின்னர் இவர்களுக்கிடையே சில பிரச்னைகள் ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

தற்போது நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் தானே கதையின் நாயகியாகவும் பல படங்களில் நடித்துவிட்டார். தொடர்ந்து பல வாய்ப்புகளில் கமிட் ஆகியும் இருக்கிறார்.

ஆனால் சிம்பு தன் காதலைத் தேடி தேடி பலரிடம் ஏமாந்து பின் லயமே ஜயம் ஜயமே லயம் என ஆன்மீக வாழ்க்கையைத் தேடி ஆட்மனாக இருக்கிறார் என்றும் பலர் கூறி வருகிறார்கள். சிம்பு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல, கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் என தொடர்ந்து வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சிம்பு தனியார் யூடியூப் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், அல்லு அர்ஜூன், லோகேஷ் கனகராஜ், திரிஷா, சிம்பு, நயன்தாரா, ராஷி கண்ணா, மிருனாள் தாகூர், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட கோலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்று கோலாகலமாக நடைபெற்றது.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்துக்காக சிறந்த நாயகன் விருதை பெற்றார் சிம்பு. அவரை மேடையில் ஏற்றி சிறப்பித்தது விருது குழு. அவரை மேடையில் பாட சொல்லி கேட்க அவர் பாடியதோ லூசுப் பெண்ணே பாடலைதான்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த பாலா மறக்குமா நெஞ்சம் பாட்டை பாடுங்கள் அண்ணா என்று கூற, அவரோ மக்களிடம் என்ன பாட்டு என்ன லூசுப் பெண்ணே வா... சரி ஓகே மக்கள் கேக்குறததான் பாடணும் என்று கூறி பாட ஆரம்பித்தார்.

அந்த பாட்டை பாடும்போது சிம்பு உருகி உருகி பாடினார். அதனைப் பார்த்த சிம்பு ரசிகர்கள் பலரும் கவலை கொண்டனர். அண்ணனுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வையுங்கள் என கோரிக்கையும் விடுத்தனர். அந்த சமயத்தில் நயன்தாரா வரவில்லை, திரிஷாதான் அமர்ந்திருந்தார். நல்லவேளை அவர் வரவில்லை என ரசிகர்கள் பேசி வருகின்றனர். ஒருவேளை நயன்தாரா அங்கு இருந்திருந்தால், சிம்பு பாடிய பாட்டுக்கு அவர் என்ன ரியாக்ட் பண்ணிருப்பார் என வீடியோ எடிட் செய்து போட்டு கலாய்த்திருப்பார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!