சென்னை திரும்பிய சிலம்பரசன்..!

சென்னை திரும்பிய சிலம்பரசன்..!
X

நடிகர் சிலம்பரசன், அவருடைய தந்தை டி.ராஜேந்திரன்.

அமெரிக்காவில் சிகிச்சைக்குப் பிறகு, டி.ராஜேந்தர் பூரண நலம் பெற்றதோடு, சிலம்பரசன் மட்டும் தற்போது சென்னை திரும்பியுள்ளார்.

இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். உடல் நலம் தேறியதைத் தொடர்ந்து, மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

டி.ராஜேந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்பாகவே, அவரது மகனும் நடிகருமான சிலம்பரசன் அமெரிக்காவுக்கு சென்று மருத்துவ சிகிச்சைக்கான முன்னேற்பாடுகளை செய்து முடித்திருந்தார். இந்தநிலையில், அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி.ராஜேந்தருக்கு, வயிற்றில் ஏற்பட்ட ரத்தக்கசிவுக்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. தற்போது பூரண நலத்துடன் அமெரிக்காவில் வீட்டு ஓய்வில் இருக்கிறார்.

இன்னும் ஒரு மாதத்துக்கு அங்கு நன்கு ஓய்வெடுத்துவிட்டு சென்னை திரும்பவிருக்கிறார் டி.ராஜேந்தர். இந்தநிலையில், டி.ராஜேந்தர் அவரது மனைவி உஷா ராஜேந்தர் மற்றும் குடும்பத்தினர் ஒரு மாத காலம் அமெரிக்காவில் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு சிலம்பரசன் சென்னை திரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, தான் விட்டுச் சென்ற படப்பிடிப்புகள் மற்றும் பட வேலைகளில் ஈடுபடவிருக்கிறார்.

Tags

Next Story