'வெந்து தணிந்தது காடு' படத்தில் 19 வயது இளைஞனாக சிலம்பரசன்..!
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரிகணேஷ் தயாரித்துள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. வருகிற செப்டம்பர். 15-ம் தேதி திரையரங்குகளில் வெளிவரப்போகும் இப்படத்தில் நடிகர் சிலம்பரசன் 19 வயது இளைஞராகத் தோன்றுகிறார். இதற்காக தனது உடல் எடையை சுமார் 15 கிலோ குறைத்துக்கொண்டு நடித்துள்ளாராம்.
படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தநிலையில், படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தகவல் வெளியாகியுள்ளது. அத்தகவலின்படி, படத்துக்கு U/A சான்று கிடைத்திருக்கிறது.
இரண்டு மணிநேரம் 53 நிமிடங்கள் திரையில் ஓடக்கூடியப் படமான 'வெந்து தணிந்தது காடு' படத்தை சுமார் 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடுவதற்கான ஏற்பாட்டை உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இப்படத்தில் நடிகர் சிலம்பரசனுடன் புதுமுக நடிகையான சித்தி இதானி நாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகிறார். மேலும், ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ், சித்திக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu