'மஹா சமுத்திரம்' படத்தில் தொடங்கிய சித்தார்த் - அதிதி காதல்..?!
சித்தார்த் - அதிதி ராய்
Tamil Actress- தமிழ்த் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இயக்குநர் மணிரத்னத்தின் உதவியாளராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய இவர் தமிழில், இயக்குநர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இவரது நடிப்பில் ஏராளமான வெற்றிப்படங்கள் திரைக்கு வந்தன.
அத்துடன், திரைப்படங்களைத் தாண்டி, சமூகக் கருத்துகளை அவ்வப்போது கூறி சர்ச்சையிலும் சிக்கி வந்தார் சித்தார்த். சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை சமந்தாவுடன் டேட்டிங்கில் இருந்த நிலையில் இருவரும் ஏதோ சில காரணங்களால் பிரிந்தனர்.
இந்தநிலையில்தான், சித்தார்த் 'மஹா சமுத்திரம்' திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அதிதி ராய் ஹைதாரி நடித்திருந்தார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்தான் நடிகை அதிதி ராய்.
'மஹா சமுத்திரம்' படத்தில் சித்தார்த்தும் அத்தியும் இணைந்து நடித்ததைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் ஜோடியாகத்தான் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, இருவரும் அவ்வப்போது டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல்கள் றெக்கை கட்டின. இந்தநிலையில் அண்மையில் மும்பை நட்சத்திர ஓட்டல் ஒன்றிலிருந்து இவர்கள் இருவரும் ஒரே காரில் ஏறிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆயினும், சித்தார்த்தும் அதிதியும் தாங்கள் இருவரும் காதலிப்பதாகவோ டேட்டிங்கில் ஈடுபட்டதாகவோ எங்கும் அதிகாரபூர்வமாகப் பொதுவெளியில் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu