திருமணம் என்றாலே எனக்கும் ஸ்ருதிக்கும் பதற்றம்: சாந்தனு ஹசாரிகா

திருமணம் என்றாலே எனக்கும் ஸ்ருதிக்கும் பதற்றம்: சாந்தனு ஹசாரிகா
X

காதலனுடன் ஸ்ருதி. 

திருமணப்பேச்சை எடுத்தாலே எனக்கும் ஸ்ருதிக்கும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது என்கிறார் ஸ்ருதிஹாசனின் காதலர் சாந்தனுஹசாரிகா.

நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இந்தநிலையில், தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த சாந்தனு ஹசாரிகா, "நான் சென்னையில் இன்ஜினீயரிங் படித்தேன், கலைத் தொழிலைத் தொடர்வதற்காக படிப்பை பாதியிலேயே நிறுத்தினேன். சென்னை நகரம் கலாசாரம் நிறைந்தது. நகரத்தின் கட்டடக்கலையில், குறிப்பாக கோயில்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலுள்ள நுணுக்கங்கள், சிற்பங்கள், வண்ணங்கள், கட்டடக்கலை என அனைத்தும் என்னை ஈர்க்கின்றன. நவீன கட்டடக்கலை மற்றும் அழகிய கோயில்களின் கலவையில் சென்னை நகரம் திகழ்கிறது.

திருமணத்தைப் பற்றி பேசினாலே எனக்கும் ஸ்ருதிக்கும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. ஒரு கலைஞனாக, எந்தவிதமான சமூகக் கட்டமைப்பையும் புரிந்துகொள்வது கடினம். நான் எப்போதும் சுதந்திரமாக, எல்லாவற்றையும் வெளிப்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதைப் புரிந்துகொள்ளும் துணை இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. எங்கள் உறவு கலையை அடிப்படையாகக் கொண்டது" என்று கூறியுள்ளார்.

சாந்தனுவும், ஸ்ருதிஹாசனும் தற்போது மும்பையில் ஒன்றாக வசித்து வருகின்றனர். தமிழில் விஜய்யுடன் 'புலி', அஜீத்துடன் 'வேதாளம்', சூர்யாவுடன் 'ஏழாம் அறிவு' என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ஸ்ருதிஹாசன் அண்மைக்காலமாக எந்த திரைப்படங்களில் நடிக்காமல் சற்று ஒதுங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!