வசூலில் சாதனை படைத்த ஷாருக்கானின் பதான்

வசூலில் சாதனை படைத்த ஷாருக்கானின் பதான்
X

பைல் படம்.

ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பதான்’ திரைப்படம் 901 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்த ‘பதான்’ படம் கடந்த 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி உடை, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, இப்படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த எதிர்ப்புகளை மீறி வெளியான ‘பதான்’ படம் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் என்பதால், ரசிகர்கள் தியேட்டரில் குவிந்து வருகின்றனர். முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் அள்ளிய இந்தப் படம் அடுத்தடுத்த நாட்களிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 4 நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்திருந்தது.

இந்த நிலையில் பதான் திரைப்படம் வெளியாகி 17 நாட்களில் உலக அளவில் 901 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் கூறுகையில், உலக அளவில் பதான் திரைப்படம் 901 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக ரூ.558.40 கோடி ரூபாயும் வெளிநாடுகளில் 342.60 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. இந்தி சினிமா வரலாற்றில் பதான் திரைப்படம் உலக அளவில் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது எனக் கூறியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!