பாலிவுட்டில் ஷாருக்கான்… டோலிவுட்டில் சல்மான்கான்…கலக்கும் நயன்தாரா..!

பைல் படம்.
Shah Rukh Khan Actor - தென்னிந்திய நடிகைகளில் இதுவரை யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு நடிகை நயன்தாராவுக்கு வாய்த்துள்ளது. ஆம். ஒரே சமயத்தில் பாலிவுட்டில் ஷாருக்கானுடனும் டோலிவுட்டில் சல்மான் கானுடனும் இணைந்து நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. மேலுமொரு வியப்பாக, இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் 'காட் ஃபாதர்' படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் விண்முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது என்கிறார்கள்.
ஏற்கெனவே, பெரிய பொருட்செலவில் சிரஞ்சீவி நடித்த 'சைரா நரசிம்ம ரெட்டி' மற்றும் 'ஆச்சார்யா' உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் ஏமாற்றம் அளித்தது. இந்தநிலையில்தான், அடுத்ததாக சல்மான் கானுடன் இணைந்து மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 'லூசிஃபர்' படத்தை இயக்குநர் மோகன் ராஜாவை வைத்து ரீமேக் செய்து நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இந்த்ப் படத்தில்தான் நடிகை நயன்தாராவும் இணைந்துள்ளார்.
மலையாளத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், பிருத்விராஜ் மற்றும் விவேக் ஓபராய் நடித்த 'லூசிஃபர்' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்தான் 'காட் ஃபாதர்'. 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் மலையாளத்தில் 'எம்புரான்' எனும் பெயரில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் நிலையில், அதன் முதல் பாகம் சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் 'காட் ஃபாதர்' என்று உருவாகியுள்ளது. எதிர்பார்த்ததைவிட, படம் மிகவும் சூப்பராக வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், 'காட் ஃபாதர்' படத்தை 57 கோடிக்கு நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி நிறுவனம் வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், சாட்டிலைட் உரிமம் உள்ளிட்ட அனைத்தும் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. திரையரங்கில் வெளியிடும் உரிமம் 90 கோடிக்கும், இந்தி மற்றும் தெலுங்கு டிஜிட்டல் உரிமம் 57 கோடிக்கும், சாட்டிலைட் உரிமம் மற்றும் ஆடியோ உரிமம் இந்தி மற்றும் தெலுங்கில் சேர்த்து 60 கோடி என ஒட்டுமொத்தமாக 207 கோடி ரூபாய் வரை படம் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. சல்மான் கானின் கேமியோ தான் படம் இத்தனை கோடிக்கு விற்பனையாகக் காரணம் என்கின்றனர் டோலிவுட்டின் விவரம் அறிந்தவர்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu