விஜய்யின் ரகசியங்களை போட்டுடைத்த ஷியாம்.. இணையத்தில் வைரல்

விஜய்யின் ரகசியங்களை போட்டுடைத்த ஷியாம்.. இணையத்தில் வைரல்
X

நேர்காணலில் கலந்துகொண்ட வம்சி, ஷியாம்.

Varisu Shaam and Vamsi about Vijay Daily Food menu - நடிகர் விஜய்யின் உணவு ரகசியங்களை வெளியிட்டு ஊடக சேனல் ஒன்றுக்கு ஷாயம் பதிலளித்துள்ளது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Varisu Shaam and Vamsi about Vijay Daily Food menu -நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 11ம் தேதி முதல் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகின. இந்த படத்தை இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார். நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன் எனப்பெரிய நட்சத்திரக் கூட்டமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் வாரிசு படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு மற்றும் கே எல் பிரவீன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டார். வாரிசு படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல் வணிக ரீதியாகவும் இந்த படம் நல்ல வசூலைக் குவித்து வருகிறது. அதன்படி உலகம் முழுவதும் 5 நாட்களில் 150 கோடி ரூபாயும், 7 நாளில் 210 கோடி ரூபாய் வசூலித்தது என அறிவிக்கப்பட்டது. மேலும் வாரிசு படம் 11 நாளில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊடகச் சேனல் ஒன்றுக்கு வாரிசு படத்தின் படக்குழுவினர் 'வாரிசு ரசிகர்கள் கொண்டாடம்' என்ற பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்துள்ளனர். இந்த நேர்காணலில் இயக்குனர் வம்சி, நடிகர்கள் சரத்குமார், ஜெயசுதா, ஷாம், பாடலாசிரியர் விவேக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நேர்காணலில் நடிகர் விஜய்யின் டயட் பிளான் குறித்த கேள்விக்கு பதில்லளித்த நடிகர் ஷாம் மற்றும் இயக்குனர் வம்சி, "அண்ணன்ட்ட கேட்டா, "காலையில பொங்கல் சாப்பிட்டேன் டா, இரண்டு பூரி, மதியம் சப்பாத்தி, சிக்கன், கொஞ்சம் சாதம், மாலையில் மூடு நல்லா இருந்தா சாதம், இல்லேன்னா சப்பாத்தி" என்று விஜய் சொல்லுவார். இயல்பாக சாப்பிடும் சாப்பாடு தான் அது. புரொடக்ஷன்க்கு என்ன உணவு வருதோ அதைத் தான் விஜய் சாப்பிடுவார். அளவா சாப்பிட்டு ஓய்வு எடுத்தால் விஜய் அண்ணா மாதிரி இருக்கலாம். ஆனால் அதை தான் நாம பண்ண மாட்டோமே. விஜய் அண்ணா உணவு விஷயத்தில் ரொம்ப தெளிவானவர்." என ஷாம் மற்றும் வம்சி இருவரும் பதிலளித்தனர்.

மேலும் சரத்குமாருடன் ஷியாம் கலந்துரையாடியது இந்த நேர்க்காணலில் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. வாரிசு படத்தில் சாங் இருக்கு.. பைட் இருக்கு.. எல்லாமே இருக்கு.. என்று சரத்குமார் கூறும்போது, உடனே ரஷ்மிகா இருக்காங்க என ஷியாம் சொல்ல.. உடனே ரஷ்மிகாவுக்கு போன் போட்டு கொடு.. என்று சரத்குமார் கூறுவது அங்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!