பத்மபூஷன் விருது பெற்ற வாணி ஜெயராம்..! விருது பெறுவதற்குள் விடைபெற்ற சோகம்..!

பத்மபூஷன் விருது பெற்ற வாணி ஜெயராம்..! விருது பெறுவதற்குள் விடைபெற்ற சோகம்..!
X
Heroine Vani District-ஏழு ஸ்வரங்களில் என்ற இனிமையான பாடலை பாடிய வாணி ஜெயராம் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Heroine Vani District-தமிழ் திரை உலகில் மிகவும் பழமையான பின்னணி பாடகி வாணி ஜெயராம் (வயது 78) 1974 ஆம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தில் 'மல்லிகை என் மன்னன் மயங்கும்...' என்ற பாடலை பாடி இவர் மிகவும் பிரபலமானார். 1971ம் ஆண்டு முதல் திரையுலகில் இருந்துவந்த வாணி ஜெயராம் 10,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகங்கள்...' என்ற பாடலை இப்போது கேட்டாலும் அனைவரது வாயையும் அசைக்க வைக்கும் இனிமையான பாடலை பாடியவரும் இவரே.

வாணி ஜெயராம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் வாணி ஜெயராம் பாடல்களை பாடியுள்ளார். 1971 ஆம் ஆண்டு குட்டி என்ற இந்தி படத்தில் பாடகியான அறிமுகமான வாணிஜெயராம் மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மாநிலங்களிலும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளை பெற்றுள்ளார்.

தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னர்களாக விளங்கிய எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களிலும் பல பாடல்களை வாணி ஜெயராம் பாடி உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் ஹாசன் படங்களிலும் பாடி உள்ளார்.

மேலும் கடந்த வாரம் இந்தியாவின் மிக உயரிய விருதுகளாகக் கருதப்படும் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகளுக்கான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விருது பட்டியலில் 6 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்திய திரையுலகின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

வாணி ஜெயராம் தனது கணவர் ஜெயராம் மரணத்திற்கு பின்னர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் தனியாக தான் வசித்து வந்தார். இந்த நிலையில் தான் இன்று காலை அவர் தனது வீட்டில் மரணம் அடைந்ததாக தவகவல் வெளியானது. அவரது நெற்றியில் காயங்கள் இருந்ததால் ஆயிரம் விளக்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தததால் போலீசார் அவர் மர்மமான முறையில் இறந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேலைக்கார பெண் மலர்க்கொடி

இதற்கிடையில் வாணி ஜெயராம் வீட்டில் வேலை செய்து வரும் மலர்கொடி என்ற பெண் செய்தியாளர்களிடம் 'வாணி ஜெயராம் அவரது வீட்டில் தனியாகத் தான் வசித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக வீட்டில் எல்லா வேலையும் நான் தான் செய்வேன். வழக்கம்போல இன்றைக்கு காலை 10.45 மணிக்கு நான் வீட்டுக்கு வந்து காலிங் பெல்லை அடித்தேன். கிட்டத்தட்ட 5 முறை அடித்தும் அவர் திறக்கவில்லை. உடனே போன் செய்து பார்த்தேன். அழைப்பை எடுக்கவில்லை. என் கணவருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னேன். அவரும் வாணி ஜெயராமிற்கு போன் செய்து பார்த்தபோதும் அழைப்பை எடுக்கவில்லை, கதவும் திறக்கப்படவில்லை என்பதால் சந்தேகமடைந்து கீழ் வீட்டில் உள்ளவர்களிடம் விஷயத்தைச் சொன்னேன். பின்னர் அனைவரும் சேர்ந்து போலீசுக்கு தகவல் சொன்னோம். அவர் நல்ல உடல் நலத்துடன் தான் இருந்தார். பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து அவருக்கு வாழ்த்துகள் வந்த வண்ணமே இருந்தது. அவர் எந்த சிகிச்சையும் எடுத்து வரவில்லை. தற்போது நெற்றியில் காயம் இருக்கிறது' என தெரிவித்துள்ளார்.

வாணி ஜெயராம் தனியாக இருந்ததை கவனித்து வந்த யாராவது நகை பணம் கொள்ளையடிப்பதற்காக அவரை கொலை செய்து இருப்பார்களா? அல்லது உறவினர்களால் ஏதாவது சொத்து பிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!