சீனு ராமசாமி - ஜி.வி.பிரகாஷ்குமார் முதல்முறையாக இணையும் 'இடிமுழக்கம்'..!

படப்பிடிப்பு தளத்தில் சீனு ராமசாமி, ஜி.வி.பிரகாஷ்.
GV Prakash Kumar New Movie - கேமரா கவிஞர்… இயக்குநர் பாலுமகேந்திராவின் பட்டறையில் பட்டை தீட்டிய வைரங்களில் ஒருவரான சீனு ராமசாமி, தனது குரு பாலுமகேந்திராவைப் போலவே, வித்தியாசமானப் படங்களைப் படைத்து தனிச்சிறப்புடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளவர்.
மிகச்சாதாரண மனிதர்களை தன் படைப்புகளின் கதாபாத்திரங்களாகப் படைத்து அந்த மனிதர்களின் உயிரோட்டமான வாழ்நிலை தொடர்பான அவர்களின் போராட்டங்களையும் கொண்டாட்டங்களையும் இயல்பு மாறாமல் காட்சிப்படுத்துபவர் சீனு ராமசாமி. அவரோடு ஜி.வி.பிரகாஷ்குமார் இணையும் முதல் படம்தான் 'இடிமுழக்கம்'.
எழுத்தாளர் ஜெயமோகன் படைத்த கதைக்களத்தை அடிப்படையாகக்கொண்டு ஆக்ஷன் த்ரில்லரான கிராமத்துப் படமாக 'இடிமுழக்க'த்தை உருவாக்கியுள்ளார் சீனு ராமசாமி. இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன் மற்றும் அருள்தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கலைமகன் முபாரக் தயாரித்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று(13/06/2022) உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதமே படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu