'பீஸ்ட்' இரண்டாம் பாகம் வருதாம் : டைரக்டர் நெல்சன் திலீப்குமார் சொல்றார்

பீஸ்ட்  இரண்டாம் பாகம் வருதாம் :  டைரக்டர் நெல்சன் திலீப்குமார் சொல்றார்
X
பீஸ்ட் படத்தில் விஜய் நடித்த வீரராகவன் கதாபாத்திரம் இரண்டாம் பாகம் எடுக்கும்படி தான் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

பீஸ்ட் படமென்னவோ வசூல் செஞ்சுக்கிட்டுதான் இருக்குது. இச்சூழலில் டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இந்த பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். ஏனென்றால் இப்படத்தில் விஜய் நடித்த வீரராகவன் கதாபாத்திரம் இரண்டாம் பாகம் எடுக்கும்படி தான் உருவாக்கப்பட்டுள்ளதாம். மேலும் விஜய் சம்மதித்தால் இரண்டாம் பாகம் வெளியாகும் என நெல்சன் தெரிவிச்சிருக்கார்

இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் மறுபக்கம் பீஸ்ட் முதல்பாகமே இவ்வளவு நெகட்டிவ் கமெண்டுகளை பெற்ற நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தேவையா என நெல்சனை பலர் விமர்சிச்சு வருவதால் இப்படம் உருவாகுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஆனால் தற்போது விஜய், நெல்சனுக்கு போன் செஞ்சு வெற்றி, தோல்வி என்பது சாதாரணமான ஒன்று. நீங்கள் விமர்சனத்தை மனதில் வைத்துக்கொண்டு கவலைப்பட வேண்டாம், நாம் மீண்டும் இணைஞ்சு ஒரு படத்தை பணியாற்றலாம் என கூறியுள்ளாராம்.

ஆக இது பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா அல்லது வேறு ஒரு புதிய படமாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்து விவாதத்தை கிளப்பி இருக்குது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்