திரைத்துறை பிரபலங்கள் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்

திரைத்துறை பிரபலங்கள் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்
X
இன்று காலை 7 மணி முதல் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் திரைத்துறை பிரபலங்கள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இன்று காலை 7 மணி முதல் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் திரைத்துறை பிரபலங்கள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.தர்பார் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்.


நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டை அரசுப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தனது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ராஹாசன் உடன் வாக்களித்தார்.

நடிகர் விஜய்சேதுபதி சென்னை கோடம்பாக்கம் கார்பரேஷன் காலனியில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கு செலுத்தி இருக்கிறார் நடிகர் விஜய். இவர் பெட்ரோல் மற்றும் டீசல் உயர்வை குறிக்கும் விதமாக சைக்களில் வந்து ஒட்டுபோட்டுள்ளார்.


தியாகராயநகர் வாக்குச்சாவடியில் நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் குடும்பத்துடன் வந்து வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர். சென்னை வளசரவாக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார்.


சிவகார்த்திகேயன் வளசரவாக்கம் குட் ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களித்தார். நடிகர் அஜித்குமார் திருவான்மியூரில் வாக்களித்தார். அதிகாலையிலேயே தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கு செலுத்தினார்.


இயக்குனர் சசிகுமார் தனது ஊரில் வாக்கு பதிவு செய்தார்.மேலும் தொடர்ந்து நட்சத்திரங்கள் தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.. நடிகர் வடிவேலு சாலிகிராமத்தில் காவேரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத்திலும், நடிகர் சிம்பு தனது குடும்பத்தினருடன் தி.நகரிலும் வாக்கு செலுத்து உள்ளனர். தொடர்ந்து தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் சாலிகிராமம் பகுதியிலும், நடிகர் ஆர்யா – அண்ணாநகரிலும், ராதிகா சரத்குமார் – கொட்டிவாக்கத்திலும், அனிருத் ,த்ரிஷா – ஆழ்வார்பேட்டையிலும், நடிகை சினேகா - தியாகராய நகரிலும் வாக்கு பதிவு செய்து வருகின்றனர்.

Tags

Next Story