வந்தியத்தேவனாக நடிக்க பயந்தேன்… மணி சார்தான் நம்பிக்கை கொடுத்தார்..!

வந்தியத்தேவனாக நடிக்க பயந்தேன்… மணி சார்தான் நம்பிக்கை கொடுத்தார்..!
X

பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட திரிஷா மற்றும் கார்த்தி.

Actor Karthi -'பொன்னியின் செல்வன்' படம் பார்க்க வருபவர்கள் மார்க் போட வரவேண்டாம். படத்தை அனுபவித்துப் பார்க்க வேண்டும் - நடிகர் கார்த்தி.

Actor Karthi - கல்கியின் புதினமான 'பொன்னியின் செல்வன்' இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படம். இப்படம், உலகம் முழுவதுமுள்ள அனைத்து தரப்பு மக்களாலும் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கிறது. இத்திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிக, நடிகையர் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மேலும், இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. டீசர், டிரைலர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது. குறிப்பாக சோழா… சோழா… மற்றும் பொன்னி நதி… பாடல் மக்களின் மனம் கவர்ந்த பாடலாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், சென்னையில் நடந்த 'பொன்னியின் செல்வன்' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் கார்த்தி, ''எப்படி வந்தியத்தேவன் கதாபாத்திரம் வந்தது என்ற கேள்வியை விட பயம்தான் எனக்கு அதிகமாக இருந்தது. மணி சார்தான் நம்பிக்கை கொடுத்தார். ஆனாலும், குந்தவை, நந்தினி போன்ற பெண்கள் கதாபாத்திரங்களுடன் நடிக்கும் போது பயத்தோடும், பொறுப்போடும் தான் நடித்தேன்.

நம் வரலாற்றை பேசப்படும் படம் இது. அந்தக் காலத்தில் ராஜராஜ சோழன் எப்படி இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியுமா? என்று மணி சாரிடம் கேட்டேன். 'அப்போது புகைப்படம் இல்லை ஆகையால் பலருக்கு தெரியாது' என்றார். இந்தப் படத்தில் கதாபாத்திர தேர்வில் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சியும், கடம்பூர்,தஞ்சாவூர், பழையார் என ஒவ்வோர் இடத்தைப் பார்க்கும் போதும் மிகவும் ஆர்வமாகவே இருந்தது.

இதைவிட இந்தப் படத்தை இவ்வளவு அழகாக சொல்லமுடியாது, மணிரத்னம் சார் இந்தப் படத்தை எப்படி பண்ணி இருக்கிறார் என்று படத்திற்கு மார்க் போட வராதீங்க, இது ஒரு அனுபவம், இந்த தலைமுறைக்கு கிடைத்த அனுபவம் இதனால், படத்தை அனுபவித்துப் பாருங்கள்'' என்றார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!