வித்தியாசமான வில்லன் வேடத்துக்காக கதை கேட்கும் சத்யராஜ்..!
நடிகர் சத்யராஜ் தன் திரையுலகத் தொடக்க காலத்தில் வில்லன் கதாபாத்திரங்களைக் கொண்டுதான் திரையில் கால்தடம் பதித்தார். 'காக்கிச் சட்டை', மூன்று முகம்', 'பாயும் புலி', 'நூறாவது நாள்', 'அமைதிப்படை' போன்ற ஏராளமான படங்களில் மிரட்டும் வில்லனாகத் தோன்றி அவர் அரகளப்படுத்தியதை அத்தனை எளிதில் யாரும் மறந்துக் கடந்திட முடியாது.
அதன்பிறகு, தனது பாதையை மாற்றி கதாநாயகனாகக் களம் இறங்கினார். அதிலும் சோடைபோகாமல் அசத்தும் நாயகனாக அறியப்பட்டார். குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், பாரதிராஜவின் 'கடலோரக்கவிதைகள்', ஃபாசிலின் 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு', ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குநர் சந்தானபாரதியின், 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' போன்ற ஏராளமான படங்களை சான்றாகப் பகரலாம்.
அதன்பிறகு அண்மைக் காலமாக, 'கடைக்குட்டி சிங்கம்', 'பாகுபலி', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' போன்ற படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வரும் சத்யராஜ் மீண்டும் வில்லன் வேடத்தில் மிரட்டலான நடிப்பைத் தொடங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் உள்ளாராம்.
இதற்காக, பல்வேறு இயக்குநர்களிடம் கதைகேட்டு வருகிறாராம் சத்யராஜ். அதிலும் குறிப்பாக, இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான 'அமைதிப்படை' அமாவாசைக் கேரக்டரை மிஞ்சக்கூடிய அளவுக்கு வலிமையான வில்லன் கேரக்டர் அமைய வேண்டும் என்கிற வேட்கையுடனேயே கதைகளைத் தேடித் தேடிக் கேட்டு வருகிறாராம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu