தம்பி ராமையா நடிப்பில் ராஜகிளி டீசர் வெளியீடு

ராஜா கிளி பட போஸ்டர் (பைல் படம்)
Samuthirakani thambi ramaiahs rajakili teaser-நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் தம்பி ராமையா, சமுத்திரகனி நடிப்பில் உருவான ‘ராஜாகிளி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தம்பி ராமையா, சமுத்திரகனி, தீபா, பிரவீன் குமார், டேனியல் பாலாஜி, பழ.கருப்பையா, அருள் தாஸ், ஸ்வேதா, ரேஷ்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ’மாநாடு’ உள்பட பட வெற்றி படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். சாய் தினேஷ் இசையில் கோபிநாத் ஒளிப்பதிவில் சுதர்சன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் தம்பி ராமையா ஒரு நடுத்தர வயது பிளேபாய் கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் செம ஜாலியாகவும் காமெடியாகவும் இறுதிக்கட்டத்தில் த்ரில்லாகவும் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது ட்ரைலரிலிருந்து தெரிய வருகிறது. இந்த படம் தம்பி ராமையா மகனுக்கு திரையுலகில் திருப்பத்தை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu