மயோசிடிஸ் நோய்க்கு வீட்டிலேயே சிகிச்சை பெறும் நடிகை சமந்தா

மயோசிடிஸ் நோய்க்கு வீட்டிலேயே சிகிச்சை பெறும்  நடிகை சமந்தா
X

சமந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பழைய படம்.

தனது நண்பர்களுடன் மயோசிடிஸ் நோய்க்கு வீட்டிலேயே சிகிச்சை பெறும் போட்டோவை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

தென்னிந்திய நடிகை சமந்தா ரூத் பிரபுவுக்கு மயோசிடிஸ் நோய் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நடிகை சமந்தா தனது உடல்நிலைக்கு சிகிச்சை எடுத்து வருகிறார். மேலும் தற்போது வீட்டிலேயே இயல்பாக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் காட்சியைப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். மயோசிடிஸ் சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஆன்டிபாடிகளுக்கான IVIG ஊசிகளை எடுத்துக்கொள்வதாக குறிப்பிட்ட போஸ்டினை நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடடுள்ள ஸ்டோரியில், வீட்டில் அவருக்கு மயோசிடிஸ் சிகிச்சை நடந்து கொண்டு உள்ளது, அப்போது அவருடைய அருகில் நண்பர்களான ராகுல் ரவீந்திரா மற்றும் நந்து ரெட்டி ஆகியோர் அமர்ந்துள்ளனர். மேலும் அந்த போட்டோவில் சமந்தா தெரியவில்லை.

முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பரில், சமந்தா இன்ஸ்டாகிராமில், மயோசிடிஸ் என்ற அரிய ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போதிருந்து, தனது உடல்நிலை குறித்த அறிவிப்புகளை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். ஜிம்மில் ஒர்கவுட் செய்வதிலிருந்து ஊசி போடுவது வரை அனைத்தையும் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் சமந்தா ரூத் பிரபு மிகவும் எதிர்பார்த்த புராண படமான சாகுந்தலம் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இம்மாதம் பிப்ரவரி 17ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அது தள்ளிப்போனது. இப்போது, சகுந்தலம் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வரவுள்ளது. ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டிகே இயக்கிய ரூசோ பிரதர்ஸ் சிட்டாடலில் சமந்தா, வருண் தவானுடன் இணைந்து நடிக்கிறார். ஷிவா நிர்வாணாவின் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் விரைவில் வெளியாக உள்ளது. இவ்வாறு சமந்தா நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக தயாராக உள்ளன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!