சமந்தா நடிக்கும் ஹாலிவுட் படம்! இப்படி ஒரு விசயம் இருக்கா இதுல?

சமந்தா நடிக்கும் ஹாலிவுட் படம்! இப்படி ஒரு விசயம் இருக்கா இதுல?
X
விவேக் கல்ரா என்பவர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க வேல்ஸ் மொவி இயக்குநர் பிலிப் ஜான் இயக்குகிறார்.

அதிரடியாக அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட் ஆகிவிட்டார் சமந்தா. மீண்டும் சினிமாவில் பிஸியாகிவிட தயாராகிவிட்டார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

சமந்தா சோலோ ஹீரோயினாக நடித்த யசோதா படத்தின் வரவேற்பு பெரிய அளவில் இல்லாத நிலையில், அடுத்து வந்த சாகுந்தலம் படம் அட்டர் பிளாப் ஆனாது. ஆனால் அனைவரையும் வாயைப் பிளக்க வைக்கும் வகையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படத்துக்கு 4 விருதுகளையும் அறிவித்துள்ளனர். எப்புட்றா என பலரும் மூக்கின் மேல் விரல் வைத்திருக்கின்றனர்.

அடுத்ததாக சிட்டாடெல் எனும் வெப் சீரிஸில் வருண் தவான் ஜோடியாக நடிக்கிறார் சமந்தா. இதன் ஆங்கில பதிவில் ஏற்கனவே பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். இதனையடுத்து கடந்த 2004ம் ஆண்டு வெளியான ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு புதிதாக உருவாக உள்ள ஹாலிவுட் படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார் சமந்தா.

தி அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ் எனும் புதினத்தை இப்போது படமாக எடுக்கிறார்கள். அந்த படத்துக்கு சென்னை ஸ்டோரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது சென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் ஒரு ஆங்கிலத் திரைப்படமாகும். இந்த படத்தின் நாயகியாக சமந்தா நடிக்க இருக்கிறார்.

சென்னையைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் டைமெரி என் முராரி எழுதிய அரேஞ்ச்மெண்ட் ஆஃப் லவ் என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகிறது.

விவேக் கல்ரா என்பவர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க வேல்ஸ் மொவி இயக்குநர் பிலிப் ஜான் இயக்குகிறார்.

படத்தின் நாயகன் அவரது தாய் இறப்புக்கு பின்னர் பூர்வீகத்தைத் தேடி சென்னை நோக்கி பயணிப்பதுதான் கதை என்று கூறப்படுகிறது. பிரிந்துபோன தன் தந்தையை சமந்தாவின் உதவியுடன் தேடுவதுதான் படத்தில் அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!