துருக்கியில் விஜய்! ஊர் சுற்றும் சமந்தா! வைரலாகும் புகைப்படங்கள்!

துருக்கியில் விஜய்!  ஊர் சுற்றும் சமந்தா! வைரலாகும் புகைப்படங்கள்!
X
Samantha and Devarakonda in Turkey-சமந்தா இப்போது துருக்கியில் ஜாலியாக அவுட்டிங் சென்றுவந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Samantha and Devarakonda in Turkey-மயோசிடிஸ் பிரச்னையிலிருந்து மீண்டு வந்த சமந்தா கொஞ்சம் கொஞ்சமாக படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான யசோதா, சாகுந்தலம் ஆகிய படங்கள் மண்ணைக் கவ்விய நிலையில், அடுத்ததாக குஷி படத்தையே பெரிதும் நம்பியுள்ளார் சமந்தா. இதுவும் தெலுங்கு படமாக உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட இருப்பதால், அதனை எதிர்பார்த்து காத்திருக்கிறார் சமந்தா.

இந்த படத்தின் வெற்றியைப் பொறுத்தே அவர் சினிமா எதிர்காலம் அமையும் என்பதால், பார்த்து பார்த்து நடித்திருக்கிறாராம். விஜய் தேவரகொண்டா ஜோடியாக சமந்தா இந்த படத்தில் நடித்திருக்கிறார். குஷி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சிட்டாடெல் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இந்த தொடரை ராஜ் மற்றும் டீகே இருவரும் இணைந்து இயக்கி வருகின்றனர்.

ஆங்கில மொழியில் உருவாகும் இந்த தொடரில் பிரியங்கா சோப்ரா நடித்திருக்கிறார். இதன் இந்திய பதிப்பில் சமந்தா நடித்திருக்கிறார். இவருடன் வருண் தவான் நடித்திருக்கிறார்.

சமந்தா இப்போது துருக்கியில் ஜாலியாக அவுட்டிங் சென்றுவந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதுபோல விஜய் தேவரகொண்டாவும் துருக்கியில் சுற்றுலா செய்யும் பயணப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இருவரும் குஷி படத்துக்காக துருக்கி சென்றுள்ளனர்.

சிவ நிர்வானா இயக்கத்தில் அழகான காதல் கதையாக உருவாகி வருகிறது குஷி திரைப்படம். சமந்தாவுடன் விஜய் தேவரகொண்டா முதல்முறையாக கதாநாயகனாக இணைந்து நடிக்கிறார். முன்னதாக மகாநடி திரைப்படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். பான் இந்தியா படமாக உருவாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் வரும் செப்டம்பர் 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!