சமந்தா - நாக சைதன்யா விவகாரம் :நடிகர் சித்தார்த் விமர்சனம், ரசிகர்கள் எதிர்ப்பு

சமந்தா - நாக சைதன்யா விவகாரம் :நடிகர் சித்தார்த் விமர்சனம், ரசிகர்கள் எதிர்ப்பு
X
நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தா ( பைல் படம்)
நடிகை சமந்தா- நாக சைன்தயா விவகாரம் குறித்து நடிகர் சித்தார்த் விமர்சனம் செய்ததற்கு ரசிகர்கள்கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் காதலித்தனர். இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் பிரம்மாண்டமான திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து முடிந்த பின்னரும் சமந்தா திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இருவரது வாழ்விலும் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனி என்பதை மாற்றி வெறும் எஸ் என்ற எழுத்தை மட்டும் பெயராக வைத்திருந்தார்.

இதனையடுத்து நாக சைதன்யாவும் சமந்தாவும் பிரியப்போவதாக கடந்த சில மாதங்களாக தீயாக தகவல் பரவிவருகிறது.

இந்தத் தகவலை நடிகர் நாக சைதன்யாவும், சமந்தாவும் தங்களது சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் உறுதி செய்தனர். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பலரும் இவர்களது பிரிவு குறித்து வருத்தம் தெரிவித்திருந்தனர்.


இந்த நிலையில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் பள்ளி ஆசிரியரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட முதல் பாடம், ஏமாற்றுபவர்கள் முன்னேறமாட்டார்கள் என்பது தான். உங்களது முதல் பாடம் ? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்து தான் சித்தார்த் கருத்து கூறியுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!