பாக்ஸிங் செய்யும் சமந்தா வீடியோ! மிகக் கடுமையான பயிற்சி!

பாக்ஸிங்  செய்யும் சமந்தா வீடியோ! மிகக் கடுமையான பயிற்சி!
X
அவர் பாக்ஸிங் பயிற்சி செய்து வருகிறார். உத்தரகண்டில் இருக்கும் சமந்தா அங்கு குளிரிலும் பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம். அடுத்து நடிக்க இருக்கும் வெப்சீரிஸுக்காக இவ்வளவு மெனக்கெடல்களை செய்து வருகிறார் என்கிறார்கள்.

நடிகை சமந்தா தனது அடுத்த படத்துக்காக பாக்ஸிங் பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த உடல் நிலையிலும் கடுமையான பயிற்சி மேற்கொள்கிறாரா என பலரும் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா கடந்த சில ஆண்டுகளாக கடுமையான சிகிச்சைகளுக்கு உட்பட்டு வருகிறார். இதனோடு அவர் ஒப்பந்தமாகியிருந்த தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள், வெப் சீரிஸ், விளம்பரப் படங்கள் என அனைத்திலிருந்து வெளியேறி தனது உடல் நலத்தை பேணி பாத்துக் கொண்டிருந்தார்.

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அவர் எந்த படத்திலும் விளம்பர படங்களிலும் நடிக்க வில்லை. ஓய்வு மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டு வரும் சமந்தா சிகிச்சையில் பலன் பெற்று முன்னேறி உடல் நலம் தேறி சில படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.

ஹிந்தியில் வருண் தவானுடன் சேர்ந்து ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்கிறார் என தகவல். மேலும் ஃபேமிலி மேன் ராஜ் மற்றும் டிகே ஆகியோர் கூட்டணியில் இன்னுமொரு வெப் தொடரில் நடிக்கிறார். இதற்காக அவர் மெனக்கெடும் வீடியோக்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகின்றன.

குறிப்பிட்ட வீடியோவில் அவர் பாக்ஸிங் பயிற்சி செய்து வருகிறார். உத்தரகண்டில் இருக்கும் சமந்தா அங்கு குளிரிலும் பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம். அடுத்து நடிக்க இருக்கும் வெப்சீரிஸுக்காக இவ்வளவு மெனக்கெடல்களை செய்து வருகிறார் என்கிறார்கள்.

முன்னதாக இவருடன் பேமிலி மேன் வெப் தொடரில் நடித்திருந்த நடிகர் மனோஜ் பாஜ்பய் சமந்தா எளிமையான உடற்பயிற்சிகளை செய்யவேண்டும் அவர் கடுமையான உடற்பயிற்சிகளை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags

Next Story