சமந்தா யார்கூட டின்னர் டேட் போயிருக்காங்க பாருங்க! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

சமந்தா யார்கூட டின்னர் டேட் போயிருக்காங்க பாருங்க! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
X
சமந்தா யார்கூட டின்னர் டேட் போயிருக்காங்க பாருங்க! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்பட உலகிலும் ஒரே நேரத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். சொந்த வாழ்க்கையில் பிரச்னை, உடல்நலக் குறைபாடு என பிரச்னைகளை அவரைச் சூழ்ந்து நிற்க, தனி ஆளாக எதிர்த்து நின்று அவற்றைக் கடந்து இப்போது மீண்டு வந்திருக்கிறார். தனது உடல்நலக் குறைபாடு மெல்ல மெல்ல குறைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அவர் கடினமான சூழ்நிலைகள் பலவற்றைக் கடந்து வந்தார். அதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் அவரின் அம்மாதான்.

சமீபத்தில் சில படங்களில் நடித்து தோல்வியைத் தழுவியிருந்தாலும் அவர் தற்போது நடித்து வரும் குஷி திரைப்படத்துக்கு பிறகு சமந்தா மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்கபலமாக இருக்கும் தாய்க்கு ஒரு பெரிய வீட்டையே பரிசாக அளித்திருக்கிறார் சமந்தா.

குஷி படத்தைத் தவிர்த்து சில வெப்சீரிஸ்களிலும் கமிட் ஆகியிருந்த சமந்தா தற்போது ஷூட்டிங்கிற்கு பிரேக் விட்டுவிட்டு அம்மாவுடன் வெளியில் செல்வதற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறாராம். சில நாட்கள் அம்மாவுடன் பயணம் மேற்கொள்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் இவர் தனது அம்மாவுடன் ஹோட்டலில் சாப்பிடுவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை ஆங்கிலத்தில் டின்னர் டேட் என்று அழைப்பார்கள். அப்படி தன் அம்மாவுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு சமந்தா பொதுவெளியில் சாப்பிட சென்றிருக்கிறார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!