விஜய் தேவாரகொண்டா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சமந்தா

நடிகை சமந்தா (பைல் படம்)
Samantha apologises to Vijay Deverakonda fans-சமந்தா ரூத் பிரபு-நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து கொண்டிருக்கும் காதல் பொழுதுபோக்கு படமான குஷி படம் மீண்டும் துவங்க உள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே காஷ்மீரில் முடித்துவிட்ட நிலையில்,சமந்தாவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சமந்தாவின் உடல்நிலை காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது, இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மகிழ்ச்சியான செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட சமந்தா, "#குஷி விரைவில் மீண்டும் தொடங்கும். தாமதத்திற்கு விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். குஷி படம் முதலில் 2022 டிசம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் அது தாமதமானது. "நாங்கள் 60 சதவீத படப்பிடிப்பை முடித்து விட்டோம். படத்தை டிசம்பர் மாதத்திற்குள் வெளியிடலாம் என்று முதலில் எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது சில காரணங்களால் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பிப்ரவரி 2023 வெளியீட்டை எதிர்பார்க்கிறோம் என தெரிவித்து இருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu