ஷூட்டிங்கில் விபத்து: ஆற்றில் மூழ்கிய நடிகை சமந்தா & விஜய் தேவரகொண்டா

ஷூட்டிங்கில் விபத்து: ஆற்றில் மூழ்கிய நடிகை சமந்தா & விஜய் தேவரகொண்டா
X

சமந்தா & விஜய் தேவரகொண்டா

காஷ்மீரில் நடந்த படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில், நடிகை சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும், ஆற்றில் விழுந்து தத்தளித்தனர்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தனக்கென ரசிகர்கள் வட்டத்தை கொண்டிருப்பவர், நடிகை சமந்தா. தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்து வருகிறார்; இதனால், தற்போதும் அவர் பிசியாக இருக்கிறார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல், தொழிலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், இயக்குனர் விஜய் நிர்வாணாவின் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் முதல்முறையாக நடிகை சமந்தா ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் பெயர், குஷி என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்று வந்துள்ளது.


இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு, ஆற்றின் அருகே நடைபெற்று வந்தது. அப்போது அங்குள்ள ஆற்றின் குறுக்கே, விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் காரில் கடப்பது போன்ற காட்சி, படம் பிடிக்கப்பட்டது. அந்த நேரத்தில், யாரும் எதிர்பாராத வகையில், பைக்கில் இருந்து தவறி விழுந்து, இருவரும் நீரில் மூழ்கி உள்ளனர்.

இதை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக விரைந்து சென்று, இருவரையும் படக்குழுவினர் துரிதமாக மீட்டனர். இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவுக்கும், சமந்தாவுக்கும் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!