விஷால் ஆர்யா நடிக்கும் எனிமி படத்தின் டிரைலரை தெறிக்கவிடும் சாம் சி.எஸ்
விஷால் ஆர்யா நடிக்கும் எனிமி படத்தின் டிரைலரை தெறிக்கவிடும் சாம் சி.எஸ்.
ஆனந்த் சங்கர் எழுதி இயக்க மினி ஸ்டுடியோஸ் சார்பாக வினோத் குமார் தயாரிக்கும் படம் எனிமி. இப்படத்தில் ஆர்யாவும் விஷாலும் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் மிருணாளினி ரவி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ் இன்னும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் டிரெய்லர் நாளை (24.07.2021) வெளியாகவுள்ளது.
ஆக்ஷன் த்ரில்லராக விஷால் ஆர்யா நடிப்பில் உருவாகும் எனிமி படத்திற்கு சாம் சி.எஸ். பின்னணி இசையை அமைத்துள்ளார். இப்படத்தின் பின்னணி இசையைக் கேட்ட இயக்குநரும் தயாரிப்பாளரும் உற்சாகமடைந்துள்ளனர். படகுழுவினர் அனைவரும் பாராட்டியுள்ளனர். மேலும், டிரைலர் மற்றும் இப்படத்தில் சாம் சி எஸ் ஸின் பின்னணி இசை ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் நிச்சயம் கவரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகரும், படத்தொகுப்பை ரேமண்ட் டெரிக் கிரஸ்டாவும் செய்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu