சைமா விருது பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ்..!

சைமா விருது பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ்..!
X

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

பெங்களூருவில், திரைத்துறையினருக்கான சைமா விருது விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது பெற்றார் லோகேஷ் கனகராஜ்.

திரைத்துறையினருக்கான சைமா விருதுகள் வழங்கும் விழா கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் நடந்து வருகிறது. இவ்விழாவில், சிறந்த இயக்குநருக்கான சைமா விருது இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு வழங்கப்பட்டது.

கடந்த 2021-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 13-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் திரையிடப்பட்ட பிரமாண்ட திரைப்படம் 'மாஸ்டர்'. நடிகர் விஜய் நாயகனாக நடித்து வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல், திரை விமர்சகர்களிடையேயும் நல்ல விமர்சனத்தையும் பெற்றது.

'மாஸ்டர்' திரைப்படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் வெற்றிக் கணக்கின் மற்றோர் வரவாகக் குறிப்பிட்டுப் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் வரிசையில் தனது பெயரை தக்கவைத்து தன் திரைப்பயணத்தைத் தொடர்ந்தார் லோகேஷ் கனகராஜ். இந்தநிலையில் இவர் பெறும் சைமா விருது, இவரது வெற்றிப் பயணத்தின் மைல் கல். தொடர்வெற்றிகள் பெற உற்சாக உந்துதல் என அவரது ரசிகர்கள் கொண்டாட்டப் பதிவை சமூக வலைத்தளங்களில் பகிர்கிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!