சென்னை கொரட்டூரில் நடிகர் விஜய் கட்டிய சாய்பாபா கோவில்

சென்னை கொரட்டூரில் நடிகர் விஜய் கட்டிய சாய்பாபா கோவில்
X

தான் கட்டிய சாய்பாபா கோவிலுடன் நடிகர் விஜய்.

சென்னை கொரட்டூரில் நடிகர் விஜய் சாய்பாபா கோவில் கட்டியது தொடர்பான படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக விளங்கி வருபவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து சினிமா ரசிகர்கள் மத்தியலும் நிலையான இடத்தை பிடித்து உள்ளார் நடிகர் விஜய்.

விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயக்கம் நடத்தி வந்த விஜய் கடந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை அழைத்து பரிசு வழங்கி பாராட்டினார். ஏற்கனவே கடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சில இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தான் நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் குதித்துள்ளார். அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அறிவித்து உள்ளார். தற்போது நடித்துவரும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்துக்கு பிறகு இன்னொரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி முழுமையான அரசியலில் ஈடுபட முடிவு செய்திருக்கிறார்.

இந்த நிலையில் விஜய் சென்னை கொரட்டூரில் புதிதாக சாய்பாபா கோவிலை கட்டி கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்துள்ள விவரம் தற்போது வெளியாகி உள்ளது. சுமார் 15 கிரவுண்டில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது கும்பாபிஷேக நிகழ்ச்சியில் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரும் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தம் கலந்து கொண்டனர். ஷோபா சந்திரசேகர் தீவிர சாய்பாபா பக்தர் என்பதால் தாயாருக்காக இந்த கோவிலை விஜய் கட்டியதாக கூறப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுகிறார்கள். சாய்பாபா கோவிலில் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!