மூன்று மொழிகளில் சொந்தக்குரலில் டப்பிங் பேசிய சாய் பல்லவி…!

மூன்று மொழிகளில் சொந்தக்குரலில் டப்பிங் பேசிய சாய் பல்லவி…!
X

நடிகர் சாய்பல்லவி.

நடிகை சாய் பல்லவி, 'கார்கி' படத்துக்காக தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்று மொழிகளிலும் தன் சொந்தக்குரலில் டப்பிங் பேசினார்.

நடிகை சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம், 'கார்கி' இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் ப்ளாக்கி ஜெனி மற்றும் மை லெஃப்ட் ஃபூட் புரொடக்‌ஷக்ன்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் ராமச்சந்திரன், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி, தாமஸ் ஜார்ஜ் மற்றும் கௌதம் ராமச்சந்திரன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாராகி இருக்கும் இப்படத்தில் நடிகை சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மூன்று மொழிக்கான டப்பிங்கையும், அவர் தனது சொந்தக் குரலிலேயே பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரையாந்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அண்மையில் சாய் பல்லவியின் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. அந்த போஸ்டர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தநிலையில், படம் ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!