காதல் கடிதம் எழுதிய சாய் பல்லவி! மாட்டிக்கொண்டு முழித்த நிகழ்வு!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் படையைக் கொண்ட நடிகைகள் குறைவுதான். அதில் ஒருவர் நடிகை சாய் பல்லவி. இவரது படங்களின் தேர்வும், அதில் நடிப்பும் நடனமும் பலரைக் கவர்ந்து வருகிறது. இதுவரை இவர் எந்த அழகு சாதன விளம்பரங்களிலும் நடிக்காமல் இருப்பதும் நடிக்கவே மாட்டேன் என மறுப்பதும், மேக்கப் போடமாட்டேன் என்று கூறுவதும் பல ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விசயமாக இருக்கிறது. பாலுமகேந்திரா காலத்தில் சாய் பல்லவி இருந்திருந்தால் எப்படி அரிதாரம் இல்லாத முகத்தைக் காட்டியிருப்பாரோ அப்படிதான் சாய் பல்லவி பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
மருத்துவம் படித்திருந்தாலும் சினிமாவே தனது கெரியர் என சினிமாவில் நடித்து வருகிறார். இவர் அதிகம் பேட்டி கொடுக்கமாட்டார். எப்போதாவது இவரது பேட்டியைக் கண்டவர்கள் யூடியூபில் அவற்றை பதிவிடுவது வழக்கம். சமூக வலைத்தளங்களில் இவரது புகைப்படங்கள் மட்டுமின்றி வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்கள். அந்த வகையில் சாய் பல்லவி தான் காதல் கடிதம் எழுதி மாட்டிக் கொண்ட நிகழ்வு பற்றி கூறியுள்ளார்.
தனது பள்ளிக் காலத்தில் இந்த நிகழ்வு நடந்ததாக கூறியுள்ள சாய் பல்லவி, அதனை விவரித்த விதம் மிகவும் கியூட்டாக இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சாய் பல்லவி பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழகத்தின் ஊட்டி பகுதியில்தான். அங்குள்ள பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் சாய் பல்லவி.
உடன் படிக்கும் ஒரு பையன் மீது சாய் பல்லவிக்கு ஈர்ப்பு ஏற்பட அவனிடம் பேச ஆசைப்படுவாராம். அதை எப்படி சொல்வது என்பது தெரியாமல் கடிதம் எழுதியிருக்கிறார். அதை கொடுக்க தைரியம் இல்லாமல் தன் புத்தகத்திலேயே வைத்து அவ்வப்போது எடுத்து படித்துக் கொண்டு இருப்பாராம். யாருக்கு தெரியப் போகிறது என்று தன் புத்தகப்பைக்குள் வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருந்தவர் ஒருநாள் வீட்டில் மாட்டிக் கொண்டுள்ளார்.
வீட்டில் அம்மா அதனை பார்த்துவிட்டாராம். இதைப் பார்த்தவுடன் ஷாக் ஆன அவர் சாய் பல்லவியை அழைத்து நடந்ததை என்ன என்று கூட விசாரிக்காமல் அடித்து உதைக்க ஆரம்பித்துவிட்டார் என காமெடியாக தெரிவித்தார். அது மட்டும்தான் அம்மாவிடம் தான் வாங்கிய அடி என்றும் அதனைத் தவிர வேறு எந்த விசயத்துக்காகவும் அம்மாவிடம் அடி வாங்கியதில்லை என்று தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu