கவலையில் சமந்தா ரசிகர்கள்! இப்படி ஆயிடிச்சே!

கவலையில் சமந்தா ரசிகர்கள்! இப்படி ஆயிடிச்சே!
X

சமந்தாவுக்கு ஏற்பட்டுள்ள சோகத்தால் ரசிகர்களும் வருத்தத்தில் இருக்கிறார்கள். இதற்கு காரணம் சமந்தா நடிப்பில் வெளியாக காத்திருக்கும் சாகுந்தலம் திரைப்படம்தான் என்கிறார்கள். 

சமந்தாவுக்கு ஏற்பட்டுள்ள சோகத்தால் ரசிகர்களும் வருத்தத்தில் இருக்கிறார்கள். இதற்கு காரணம் சமந்தா நடிப்பில் வெளியாக காத்திருக்கும் சாகுந்தலம் திரைப்படம்தான் என்கிறார்கள்.

சமந்தாவுக்கு ஏற்பட்டுள்ள சோகத்தால் ரசிகர்களும் வருத்தத்தில் இருக்கிறார்கள். இதற்கு காரணம் சமந்தா நடிப்பில் வெளியாக காத்திருக்கும் சாகுந்தலம் திரைப்படம்தான் என்கிறார்கள்.

சமந்தா அதிரடி நாயகியாக தனித்து நடித்த படம் யசோதா. சமந்தாவுடன் உன்னி முகுந்த், வரலட்சுமி சரத்குமார், முரளி ஷர்மா உள்ளிட்டோர் நடித்திருப்பர். அம்புலி, ஆ, ஜம்புலிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹரி சங்கர், ஹரிஸ் நாராயண் இணையர் இந்த படத்தை இயக்கியிருந்தனர். இதில் சமந்தாவுக்கு நல்ல பெயரும் கிடைத்தது.

யசோதா திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் தனித்த கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தா தேர்ந்தெடுத்த ஸ்க்ரிப்ட் தான் சாகுந்தலம். தெலுங்கு படமாக உருவானாலும் தமிழிலும் ரிலீஸ் ஆவதால் இது மிகவும் பரவலாக எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கிறது. சரித்ர கதையம்சம் கொண்ட இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். சமந்தாவின் நடிப்பில் இந்த படம் நிச்சயம் பேசப்படும் படமாக அமையும். தென்னிந்திய அளவில் மட்டுமின்றி ஹிந்தியிலும் இந்த படம் குறித்த பேச்சு இருக்கும் என கூறுகிறார்கள்.

தில் ராஜூ ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இந்த படம் கடந்த 2022 நவம்பர் மாதம் 4ம் தேதியே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டியது. ஆனால் குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை. காரணம் அன்றைய நாளுக்குள் படப்பிடிப்பு முடிந்த படம் தயாராகவில்லை. இதனால் மறுபடியும் வெளியீட்டு தேதி மாற்றி அமைக்கப்பட்டது.

ஒட்டுமொத்த படத்தையும் 3டி தொழில்நுட்பத்துக்கு மாற்ற காலம் அதிகம் எடுத்துக் கொண்டதால், வரும் பிப்ரவரி 17ம் தேதி இந்த படத்தை வெளியிட முடிவு செய்தனர். ஆனால் இன்னமும் குறிப்பிட்ட பணிகள் முடியாததன் காரணமாக மீண்டும் பட வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளது படக்குழு.

ஒரு தேதியை அறிவித்துவிட்டு பின் பின் வாங்கும் வேலையே வேண்டாம் என நினைத்து இம்முறை ரிலீஸ் தேதியை அறிவிக்கவே இல்லை. படம் குறித்த பணிகள் முடிந்த பிறகு தேதியை முடிவு செய்து அறிவித்துவிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதுவரை எந்த காரணத்தையும் குறிப்பிட்டு சொல்லாத நிலையில், படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகள்தான் இன்னமும் பிரச்னையாக இருப்பதாகவும் 1 மாதம் வரைக்கும் தாமதமாகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தனக்கு ஏற்பட்ட உடல் நலக் கோளாறு காரணமாக விளம்பரப் படங்கள், திரைப்படங்கள் பலவற்றிலிருந்து வெளியேறிவிட்ட சமந்தா, தற்போது இந்த படத்தை மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து வேறு எந்த படத்திலும் அவர் கமிட் ஆகவில்லை. இப்போது உடல் நலம் தேறி வருவதாலும், விரைவில் சில சிகிச்சைகளுக்கு உட்பட்டு நன்கு உடல் தேறி பூரண நலமுடன் நடிப்பைத் தொடரலாம் எனவும் சமந்தா முடிவு செய்துள்ளாராம்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!