'ஆர்ஆர்ஆர்' படத்தின் அசத்தலான ஆயிரம் கோடி வசூல் சாதனை..!

ஆர்ஆர்ஆர் படத்தின் அசத்தலான ஆயிரம் கோடி வசூல் சாதனை..!
X

பைல் படம்.

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'ஆர் ஆர் ஆர்' படம் உலகளவில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படமாக சாதனை புரிந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் அண்மைக் காலமாகவே உலகளவில் வசூல் சாதனை படைத்து ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையே தென்னிந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

தெலுங்குப் படவுலகின் முன்னணி இயக்குநரான ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி', 'ஆர்ஆர்ஆர் ' திரைப்படங்கள் உலக அளவில் இந்தியத் திரைப்பட வசூல் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 'பாகுபலி', 'ஆர்ஆர்ஆர்' படங்களின் மொத்த வசூல் சாதனைகளை இனிவரும் புதிய படங்கள் சமன் செய்யுமா அல்லது அவற்றைத் தாண்டியும் சாதனை புரிய இயலுமா என்பது கேள்விக்குறியே.

தற்போது, ஓடிடி தளத்தில் இந்தியாவிலிருந்து வந்த படங்களில், 45 மில்லியன் மணி நேரப் பார்வைகளை 'ஆர்ஆர்ஆர்' படம் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளதாக நெட்பிளிக்ஸ் தளம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் கூட்டணியில் இணைந்த 'ஆர்ஆர்ஆர்' படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றி பெற்று, 1000 கோடி ரூபாய் வசூலைப் பெற்று சாதனை புரிந்துள்ளது. இந்த அசத்தலான அசாத்திய வெற்றியை இனிவரும் படங்கள் முந்துமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!