ரிலாக்ஸாக குடும்பத்துடன் டூர் செல்லும் 'ரோலெக்ஸ் சார்' சூர்யா..!

ரிலாக்ஸாக குடும்பத்துடன் டூர் செல்லும் ரோலெக்ஸ் சார் சூர்யா..!
X

நடிகர் சூர்யா-நடிகை ஜோதிகா.

நடிகர் சூர்யா, 'விக்ரம்' வெற்றியுடன் அடுத்தப் படங்களின் வேலைகள் தொடங்கும்முன் குடும்பத்துடன் டூர் செல்லவிருக்கிறார்.

நடிகர் சூர்யாவின் திரையுலகப் பயணம் தற்போது ஏறுமுகத்தில்… ஆம். 'சூரரைப்போற்று', 'ஜெய்பீம்' என்று மீண்டும் வெற்றிப்படிக்கட்டில் தடம் பதிக்கத் தொடங்கியவருக்கு, எதிர்பாராராத விதமான இன்ப அதிர்ச்சியாகக் கிட்டியதுதான் நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்திற்கான அழைப்பு.

படத்தின் இறுதிக் காட்சிகளில் வெறும் மூன்று நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றும் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் அரங்கமே அதிரும் அளவுக்கு ஆக்ரோஷமாக மிரட்டியிருப்பார் சூர்யா. இந்த கேரக்டர்தான் 'விக்ரம்-3'-க்கான லீட் என்பதுதான் சூர்யாவுக்கான முக்கிய ப்ளஸ் பாயின்ட்.

இந்தநிலையில், தற்போது இயக்குநர் பாலாவின் திரைப்படத்திலும் வெற்றிமாறனின் 'வாடிவாசல்', இயக்குநர் ஞானவேலுடன் ஒரு படம், லோகேஷ் கனகாராஜுடன் 'விக்ரம்-3', இந்தியில் 'சூரரைப்போற்று' படத்தின் தயாரிப்பாளர் மற்றும் சிறப்புத்தோற்றம் என பிசியாக உள்ள இத்தருணத்தில்தான், ஒருசின்ன இடைவெளியில் ரிலாக்ஸாக குடும்பத்துடன் டூர் செல்ல திட்டமிட்டிருக்கிறார் சூர்யா.

அடுத்தடுத்த பட வேலைகள் தொடங்குவதற்குள் ஒரு மாதம் கோவா டூருக்கு பிளான் பண்ணியுள்ள சூர்யா குடும்பத்துடன் சென்று எஞ்ஜாய் பண்ணிவிட்டு வந்தபின்பே வேலைகளில் வேகமெடுக்கவிருக்கிறாராம் ரோலெக்ஸ் சார்..!

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!