மாஸ்டர் பிளாஸ்டரை சந்தித்த ரோலக்ஸ்...!? திடீரென்று ஏன்?

மாஸ்டர் பிளாஸ்டரை சந்தித்த ரோலக்ஸ்...!? திடீரென்று ஏன்?
X
இந்திய அணியின் முன்னாள் வீரரும், உலக கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கருடன் நடிகர் சூர்யா சந்தித்து பேசியது வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் வீரரும், உலக கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கருடன் நடிகர் சூர்யா சந்தித்து பேசியது வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சூர்யா, சமீபத்தில் சூர்யா நடித்து வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்களின் மூலம் அவரது ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்தப் படங்கள் இந்திய அளவிலும் கவனம் பெற்றது.

சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா , சரியான படங்கள் இல்லாமல், ரசிகர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கிற மாதியான படங்களை கொடுக்க முடியாமல் இருந்தேன். மேலும் என்னை நிரூபிப்பதற்கான படங்கள் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தே. அந்த நிலையில் சூரரை போற்று படம் வெளியானது. அதனை தந்த இயக்குநர் சுதா கொங்கராவிற்கு நன்றி என உருக்கமாக பேசியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து மத்திய் அரசின் சார்பில் நடைபெற்ற 68-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சூரரைப் போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சூர்யாவிற்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.

சூர்யா நடிப்பில் தற்போது 42வது படம் தயாராகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் நடிகர் சூர்யா பல்வேறு கெட்-அப்களில் நடித்துள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது மற்றும் டிஎஸ்பி (தேவி ஸ்ரீ பிரசாத்) இசையமைத்துள்ளார்.

இது தவிர வெற்றிமாறனின் வாடிவாசல், சுதா கொங்கரா இயக்கிய படம், டிஜே ஞானவேல் இயக்கும் படம் என சூர்யாவின் வரிசை நீண்டு கொண்டே செல்கிறது. நடிகர் சூர்யா தற்போது மும்பையில் செட்டிலாகிவிட்டார். அவரது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகள் தியா மற்றும் தேவ் ஆகியோரும் உள்ளனர். சமீபத்தில், ஜோதிகா தனது புதிய செல்ல நாய்க்குட்டியின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், மும்பையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை நடிகர் சூர்யா சந்தித்தார். சூர்யா அவருடனான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அதற்கு அன்பும் மரியாதையும் என தலைப்பிட்டுள்ளார். சூர்யா - சச்சின் சந்திப்பை எதிர்பார்க்காத ரசிகர்கள் இந்த அப்டேட் எங்கள் பட்டியலில் இல்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஏன் சந்தித்தார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை.

குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகர். இதை அவரே பல்வேறு பேட்டிகளில் வெளிப்படையாக கூறியுள்ளார். கிரிக்கெட் வீரரின் ஃபேவரைட் ஹீரோவான சச்சின் டெண்டுல்கரை சூர்யா சந்தித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. சூர்யா-சச்சின் இணைந்து இருக்கு படங்கள் ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!