துருவ் விக்ரம் ஜோடியாக நடிகை ரோஜா மகள் அன்ஷூமாலிகா அறிமுகம்

துருவ் விக்ரம் ஜோடியாக நடிகை ரோஜா மகள் அன்ஷூமாலிகா அறிமுகம்
X

roja daughter new movie  - நடிகை ரோஜா, இயக்குனர் செல்வமணி ஆகியோரது மகள், அன்ஷூமாலிகா தெலுங்கு படத்தில், அறிமுகமாகிறார். 

Actress Roja Daughter- நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஜோடியாக, நடிகை ரோஜாவின் மகள் அன்ஷூமாலிகா தெலுங்கு படத்தில், அறிமுகமாகிறார்.

Actress Roja Daughter- தமிழ் சினிமாவில், 1990களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் ரோஜா. இயக்குனர் ஆர்.கே செல்வமணியை காதலித்து, திருமணம் செய்துகொண்டார். இவர் தற்போது எந்த ஒரு படத்திலும் நடிப்பதில்லை. தீவிர அரசியல்வாதியாக மாறி, ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார்.


கூடிய விரைவில் இவருடைய மகள் அன்ஷூமாலிகா நடிகையாக அறிமுகமாகிறார் என தகவல் வெளிவந்தது. அந்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது. தெலுங்கு திரைப்படம் ஒன்றில், கதாநாயகியாக ரோஜாவின் மகள் அன்ஷூமாலிகா நடிக்கவுள்ளார்.


பிரபல முன்னணி தமிழ் சினிமா நடிகர் விக்ரமின் மகன், இளம் நடிகர் துருவ் விக்ரம் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாரிசு அரசியலை போல, சினிமாவிலும் வாரிசு நடிகர்கள், நடிகைகள் வந்துகொண்டே இருக்கிறார்கள். நடிகை ரோஜாவின் மகளும் கலை சேவை செய்ய வந்துவிட்டார். எதிர்காலத்தில் அம்மா ரோஜாவை போலவே, அரசியலுக்கும் செல்வாரோ, என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்கின்றனர் ரசிகர்கள்




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!