நடிகை ரோஜாவின் மகளுக்கு இளம் வயதில் சிறந்த எழுத்தாளர் விருது.

Roja Daughter Age
X

Roja Daughter Age

Roja Daughter Age-தமிழ், தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகை ரோஜாவின் மகள் அனுஷ்மலிகா இளம் வயதில் விருது பெற்று அசத்தியுள்ளார்.


முன்னாள் நடிகை ரோஜா மற்றும் அவரது கணவர் டைரக்டர் செல்வமணியுடன் மகள் அன்ஷீ மலிகா (கோப்பு படம்)

Roja Daughter Age-பிரபல நடிகையும், ஆந்திர மாநிலத்தின் தற்போதைய அமைச்சருமான ரோஜாவின் மகளுமான அன்ஷு மலிகா, மிக இளம் வயதில் பெற்ற விருதிற்காக விவேகம் பெற்று வருகிறார்.இவருக்கு19 வயது இருக்கலாம். இந்த இளம் வயதில் எழுத்தாளருக்கான விருதைப் பெற்றதால் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பிரிட்டனில் வெளியாகும் இன்புளுயென்சர் புத்தகத்தின் அட்டடைப் படத்தில் அன்ஷீ மலிகா (கோப்பு படம்)

நடிகை ரோஜா

நடிகைரோஜா 1974 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருப்பதியில் நாகராஜா ரெட்டி மற்றும் லலிதா ஆகியோருக்கு ஸ்ரீ லதா ரெட்டியாகப் பிறந்தார். குமாரசாமி ரெட்டி மற்றும் ராமபிரசாத் ரெட்டி ஆகிய இரு சகோதரர்களுடன் ஒரே பெண் குழந்தையாக இருந்தார்பின்னர், குடும்பம் ஹைதராபாத் சென்றார். திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ரோஜா திரைப்படங்களில் நுழைவதற்கு முன்பு குச்சிப்புடி கற்று நடனம் ஆடினார்.

இளம் எழுத்தாளருக்கான விருதுடன் முன்னாள் நடிகை ரோஜாவின் மகள் அன்ஷீ மலிகா(கோப்பு படம்)

திரைப்பட வாழ்க்கை

ரோஜா தெலுங்கு படங்களின் மூலம் திரையுலகில் நுழைந்தார். அவரது முதல் படம் பிரேமா தபசு ராஜேந்திர பிரசாத்துடன் நடித்தது, அங்கு முழு திரைப்படமும் திருப்பதியில் படமாக்கப்பட்டது.இவர் நடிகர் பிரசாந்துடன் இணைந்து செம்பருத்தி படத்தின் மூலம் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். மம்முட்டியுடன் மக்கள் ஆட்சி படத்தில் "மேலூர் மாமன்" மற்றும் பிரபுதேவாவுடன் ராசையாவில் "மஸ்தானா மஸ்தானா" போன்ற பாடல்களுக்காக அவர் பிரபலமானார்.

ஒய்எஸ்ஆர் கட்சியின் அமைச்சரான முன்னாள் நடிகை ரோஜாவும் அவரது மகளும் (கோப்பு படம்)

அரசியல் வாழ்க்கை

ரோஜா 1999 இல் தெலுங்கு தேசத்தில் சேர்ந்தார் மேலும் கட்சியின் தெலுங்கு மகிளா பிரிவின் தலைவராக இருந்தார்.2009 ஆம் ஆண்டு ஆந்திர மாநில தேர்தல்களில் அவர் தோல்வியடைந்தார். ஆகஸ்ட் 2009 இல், அவர் டிடிபியில் இருந்து விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்டபோது சேர்ந்தார். 2014 பொதுத் தேர்தலில், நகரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். 2019 தேர்தலில் நகரி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். முடிவுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் தொகுதியில் வெற்றி பெற்றார்.தற்போதும் ஒய்எஸ்ஆர் காங்கிரசில் தான் அமைச்சராக உள்ளார். இவர் டைரக்டர் செல்வமணியைத்திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் பிறந்த மகள்தான் அன்ஷீ மாலிகா. இவருக்கு தற்போது இளம் வயதில் விருது கிடைத்துள்ளது.

தி ஃபிளேம் இன் மை ஹார்ட்'

நடிகை ரோஜாவின் மகளுக்கு நடிக்க வாய்ப்புகள் வந்தாலும், தனக்கு பிடித்ததை செய்து அதில் வைரமாக ஜொலிக்கிறார்.நட்சத்திர ஜோடியான நடிகை ரோஜா - இயக்குனர் செல்வமணியின் மகள் அன்ஷு மலிகா, சமீபகாலமாக இணையதள உருவாக்கம் மற்றும் உள்ளடக்கம் எழுதுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஜி டவுன் இதழில் இவரது 'தி ஃபிளேம் இன் மை ஹார்ட்' என்ற புத்தகம் வெளியாகி அந்த ஆண்டின் தென்னிந்திய எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளது. இவ்வளவு இளம் வயதில் எழுத்தாளர் என்ற விருதை வெல்வது அசாதாரணமானது அல்ல, எனவே அன்ஷு மலிகா தனது நடிகையும் அமைச்சருமான அம்மா அம்மாவை விட பிரகாசிப்பார்.

ரோஜாவின் மகளை பாராட்டி நெட்டிசன்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்றுவிட்டு பிரபல பாலிவுட் நடிகை சாஜன் நடத்திய விருதின் புகைப்படத்தை ரோஜாவின் மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இருக்கும் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!