பிக்பாஸ் தொகுப்பாளர் மாற்றப்படுகிறாரா?

பிக்பாஸ் தொகுப்பாளர் மாற்றப்படுகிறாரா?
X

சல்மான்கான் (பைல் படம்)

Salman khan latest news-வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் கானுக்கு பதிலாக இயக்குனர் ரோஹித் ஷெட்டி நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

Salman khan latest news-தமிழ் சினிமாவில் 2017ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. ஆரவ், ரித்திகா, முகென் ராவ், ஆரி கடைசியாக ராஜு ஜெயமோகன் வரை பிக்பாஸ் டைட்டில்களை வென்றுள்ளார்கள்.

அடுத்த சீசன் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தாமதமாகும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தான் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஒரு சோகமான தகவல் வந்துள்ளது.

ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 2006ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துவிட்டன. அடுத்த சீசனிற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் கானுக்கு பதிலாக இயக்குனர் ரோஹித் ஷெட்டி நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம், சீசனிற்கு சீசன் சம்பளத்தை உயர்த்தும் சல்மான்கான் இந்த சீசனிற்கு ரூ. 1000 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகவும் இதனால் தயாரிப்பாளர் வேறொரு நபரை தொகுத்து வழங்க அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால் சில தகவல்கள் இது உண்மை இல்லை, சல்மான் கான் தான் தொகுத்து வழங்குகிறார் எனவும் தெரிவிக்கின்றன.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!