தேறுவாரா 'டாக்டர்' ? ரிலீசானது சிவகார்த்திகேயன் படம்!

தேறுவாரா டாக்டர் ?  ரிலீசானது சிவகார்த்திகேயன் படம்!
X
பல தடைகளை கடந்து, தியேட்டரில் இன்று வெளியாகி இருக்கும், சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படம் எப்படி உள்ளது?

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகி இருக்கிறது, சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமும், கேஜேஆர் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரித்த 'டாக்டர்'. மார்ச் மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம், கொரோனோ தொற்று காரணமாக தள்ளிப்போனது. நேற்று வெளியாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் சில சிக்கல்கள் எழுந்தன. அந்த பஞ்சாயத்துகளையும் தீர்த்து, ஒருவழியாக, இன்று தியேட்டர்களில் படம் வெளியாகியுள்ளது.

அதிகரித்த எதிர்பார்ப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படத்தை, விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' பட இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். கதாநாயகி பிரியங்கா அருள் மோகன். இவர்களுடன் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல், ஏற்கனவே 'ஹிட்' ஆகி, எதிர்பார்ப்பை கூட்டிவிட்டது.

இந்திய ராணுவத்தின மருத்துவராக பணிபுரியும் வருண் (சிவகார்த்திகேயன்) பத்மினியை (ப்ரியங்கா அருள் மோகன் ) திருமண நிகழ்வில் சந்திக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர். ஆனால், திடீரென, தனக்கு பிடிக்கவில்லை என்று பத்மினி சொல்ல, கதை சூடுபிடிக்கிறது. கடைசியில் இருவரும் எப்படி இணைகிறார்கள் என்பதே மீதிக்கதை.

கைகொடுக்கும் காமெடி

படம் வெளியான நிலையில், சமூக வலைதளங்களில் பாசிடிவான விமர்சனங்கள் அதிகம் வரத் தொடங்கி இருக்கின்றன. டிரைலரை பார்த்து த்ரில் படம் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், முதல் பாதி காமெடியாக இருப்பதாகவும், முழு பொழுதுபோக்கு படம் என்றும் பலரும் விமர்சித்துள்ளனர்.

அதே நேரம், சிவகார்த்திகேயனுக்கு, நடிப்புத்திறமையை வெளிப்படுத்தக்கூடிய காட்சிகள், படத்தில் இல்லை. படத்தின் இரண்டாம் பாதி, சற்று அயர்ச்சியை தருவதாக, ஒருசில எதிர்மறை விமர்சனங்களும் வந்துள்ளன. ஆனாலும், சிவகார்த்திகேயனின் மாஸ் படங்களில் இதுவும் ஒன்று. தியேட்டருக்கு போனால், கலகலப்பாக இருக்கலாம்; ஒருமுறை படத்தை பார்க்கலாம; குறிப்பாக யோகிபாபு, கிங்ஸ்லே நகைச்சுவையில் முத்திரை பதித்துள்ளதாக, பலரும் புகழ்ந்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!