காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளித்து உத்தரவு

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளித்து உத்தரவு
X
பாஜகவினர் விடுத்த கோரிக்கையை ஏற்று காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு புதுச்சேரி அரசு கேளிக்கை வரிவிலக்கு அளித்து உத்தரவு

திரைப்படத்திற்கு வரிச்சலுகை அளிக்கவேண்டும் பாஜகவினர் விடுத்த கோரிக்கையை ஏற்று காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு புதுச்சேரி அரசு கேளிக்கை வரிவிலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் "தி காஷ்மீர் ஃபைல்ஸ்".


இப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.. தற்போது இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டுகளை பெற்று வருகிறது. 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு படம் வெளியாகி இருந்தது.

இந்த திரைப்படத்திற்கு ஏற்கெனவே அரியானா, மத்திய பிரதேசம், திரிபுரா, கோவா, கர்நாடகா, உத்தரகாண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்கள் வரிச்சலுகை வழங்கியுள்ள நிலையில், தற்போது புதுச்சேரி அரசும் இந்த திரைப்படத்திற்கு வரிச்சலுகை அளித்துள்ளது. பாஜகவினர் இந்த திரைப்படத்திற்கு வரிச்சலுகை அளிக்கவேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Next Story