ஜிகர்தண்டா படத்தின் பாகம் இரண்டு உருவாகப் போகுதாமில்லே

ஜிகர்தண்டா படத்தின் பாகம் இரண்டு உருவாகப் போகுதாமில்லே
X
கார்த்திக் சுப்புராஜின் டைரக்‌ஷனில் உருவாகி சூப்பர் ஹிட்டடிச்ச ‘ஜிகர்தண்டா’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல்

2014-ஆம் வருஷம் கார்த்திக் சுப்புராஜின் டைரக்‌ஷனில் உருவாகி சூப்பர் ஹிட்டடிச்ச 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல்

2014-ஆம் வருஷம் கார்த்திக் சுப்புராஜின் டைரக்‌ஷனில் உருவாகி சூப்பர் ஹிட்டடிச்ச படம் 'ஜிகர்தண்டா'. இந்த படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படத்தை கதிரேசன் தயாரிச்சிருந்தார்.


இந்த படத்தில் நடிகர் சித்தார்த் குறும்பட இயக்குனராகவும், பாபி சிம்ஹா கேங்ஸ்டராகவும் மிரட்டியிருந்தார். கார்த்திக் சுப்புராஜின் வித்தியாசமான கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அதோடு சிறந்த துணை நடிகர் மற்றும் எடிட்டிங்கிற்காக இரு தேசிய விருதும் கிடைச்சுது.

இந்நிலையில் இப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், முதல் பாகத்தை தயாரித்த கதிரேசன் இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுது. மேலும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story
ai solutions for small business