'லால் சிங் சத்தா' படத்தின் தமிழ் பதிப்பு உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்

லால் சிங் சத்தா படத்தின் தமிழ் பதிப்பு உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்
X

லால் சிங் சத்தா படத்தை தமிழில் வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்

Red Giant Movies bags Aamir Khan movie : 'டங்கால்' படம், தமிழிலும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, 'லால் சிங் சத்தா' படமும் தமிழ் பேச உள்ளது. இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

Red Giant Movies bags Aamir Khan movie : பாலிவுட் நடிகர் அமீர் கான் கதையின் நாயகனாக நடித்து இருக்கும் 'லால் சிங் சத்தா' படத்தின் தமிழ் பதிப்பை, உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஃபாரஸ்ட் கம்ப் (Forrest Gump) படத்தின் உரிமையை வாங்கியுள்ள பாலிவுட் நடிகர் அமீர் கான், அதை இந்திய மக்கள் அனைவரும் பார்த்து மகிழும் வகையில், 'லால் சிங் சத்தா' என்ற பெயரில் படமாக தயாரித்து அதில் நடித்தும் உள்ளார்.

கதையின் நாயகனாக அமீர் கான், நாயகியாக கரீனா கபூர், டோலிவுட் நடிகர் நாகசைதன்யா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு திரைநட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர்.

'டங்கால்' படம், தமிழிலும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, 'லால் சிங் சத்தா' படமும் தமிழ் பேச உள்ளது. இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

'லால் சிங் சத்தா' படம், ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாக உள்ளது.

கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், சமீபகாலமாக, தங்களது பேனரில் தொடர்ந்து படங்களை வெளியிட்டு வருகிறது. ராதே ஷ்யாம், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம் படங்களை தொடர்ந்து, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், அமீர் கானின் 'லால் சிங் சத்தா' படத்தை வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது