மகாலட்சுமியை மணந்தார் ரவீந்திரன்… வாயடைத்து நிற்கும் ரசிகர்கள்..!

மகாலட்சுமியை மணந்தார் ரவீந்திரன்… வாயடைத்து நிற்கும் ரசிகர்கள்..!
X

தயாரிப்பாளர் ரவீந்தரனை திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி.

Mahalakshmi Actress Marriage - சின்னத்திரை நடிகை மகாலட்சுமியும், சினிமா தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரனும் திருமணம் செய்து கொண்டனர்.

Mahalakshmi Actress Marriage -சின்னத்திரை நாயகியான மகாலட்சுமியும் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என அண்மையில் பன்முகம் காட்டிவரும் லிப்ரா ரவி என்று அழைக்கப்படும் ரவீந்திரன் சந்திரசேகரனும் நேற்று (01/09/2022) திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தத்தமது இணையரைப் பிரிந்து வாழ்ந்து வந்தவர்கள் என்பதால், இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரையில் பல முன்னணி சீரியல்களில் நடிகையாக வலம் வருபவர் மகாலட்சுமி. 'தேவதையைக் கண்டேன்', 'பொண்ணுக்கு தங்க மனசு', 'ஓவியா', 'வாணி ராணி', 'செல்லமே', 'அரசி', 'கேளடி கண்மணி' என ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்துப் பிரபலமானவர் இவர்.

அண்மையில், தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவராக அறியப்படுபவர் ரவீந்திரன் சந்திரசேகரன். சிறிய பட்ஜெட் படங்கள் தயாரிப்பின் மூலம் கவனம் ஈர்த்தவர் இவர். இவரது தயாரிப்பில் வெளிவந்தவைதான், 'சுட்டக்கதை', 'நளனும் நந்தினியும்', 'கொலை நோக்கு பார்வை', 'கல்யாணம்', 'முருங்கைக்காய் சிப்ஸ்' உள்ளிட்ட படங்கள். அதோடு இவரது இயக்கத்தில் வெளியான படம்தான், 'மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்'. மேலும், ஒருசில படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்து நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்.

இந்தநிலையில், ரவீந்திரனும் மகாலட்சுமியும் தங்கள் திருமணப் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, தங்களது திருமணம் குறித்தக் கருத்துகளையும் பகிர்ந்துள்ளனர். அவர்களது பதிவுகளுக்குப் பெரும்பாலான ரசிகர்கள் புலம்பல் பதிவுகளைப் பின்னூட்டமாகப் பதிவிட்டு வாயடைத்து நிற்கின்றனர். ஆனாலும், அதற்கெல்லாம் அசராமல் ரவீந்திரனும் மகாலட்சுமியும் புன்னகை ததும்பும் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தியவண்ணம் உள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!