விஜய் டிவி பிரபலத்தைக் காதலிக்கிறாரா சீரியல் நடிகை ரவீனா?

விஜய் டிவி பிரபலத்தைக் காதலிக்கிறாரா சீரியல் நடிகை ரவீனா?
இருவரும் மிக நெருக்கமாக வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு சந்தேகத்தை மேலும் வலுவாக்குகின்றன.

விஜய் தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று மௌன ராகம். இதன் முதல் பாகம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றதை அடுத்து இரண்டாம் பாகம் புதுமுக நடிகர்களை வைத்து துவங்கப்பட்டது. இதில் ஹீரோயினாக ராட்சசன் பட புகழ், ரவீனா தாஹா நடித்தார்.

சக்தி கதாபாத்திரத்தில் இவர் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளார். தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்று வருகிறார். இந்நிலையில் நிறைய நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

பிரபலமான வளர்ந்து வரும் நடன கலைஞர் மணிச்சந்திராவுடன் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றும் ரவீனா, அவரைக் காதலிப்பதாக செய்தி பரவி வருகிறது. இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதும், செல்லோ, ஹார்ட்டின் என அம்பு விட்டு பேசுவதும் இவர்களுக்குள் காதல் இருப்பது உண்மை எனும்படியாக இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர் சமூக வலைத்தள வாசிகள்.

இருவரும் மிக நெருக்கமாக வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு சந்தேகத்தை மேலும் வலுவாக்குகின்றன.

Tags

Next Story