மீண்டும் கார்த்தியுடன் ஜோடி சேரும் ராஷ்மிகா மந்தனா..!

மீண்டும் கார்த்தியுடன் ஜோடி சேரும்   ராஷ்மிகா மந்தனா..!
X
நடிகை ராஷ்மிகா மந்தனா பிஸியாக நடித்து வரும் நிலையில், மீண்டும் தமிழில் கார்த்திக்கின் ஜோடியாக நடிக்கவிருக்கிறார்.

தமிழில் நடிகர் கார்த்தி நடித்த 'சுல்தான்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது அவர், தென்னிந்தியத் திரைப்படங்களைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் கால்பதித்து பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

தமிழில், நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் ராஷ்மிகா, இந்தியில் 'குட்பை', 'மிஷன் மஜ்னு', 'அனிமல்' என மூன்று படங்களில் நடித்து வருகிறார். மேலும், அல்லு அர்ஜுனுடன் 'புஷ்பா- 2' படத்தில் அவரது மனைவியாக ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிவித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. அந்தப் படத்திற்கு அவர், தனது சம்பளத்தை ரூ.4கோடியில் இருந்துரூ. 5 கோடியாக உயர்த்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில்தான், தமிழில் இயக்குநர் மித்ரன் இயக்கும் 'ஜப்பான்' படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக கமிட்டாகி இருக்கிறாராம் ராஷ்மிகா. ட்ரீம் வாரியம் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கவிருக்கும் தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரியவருகிறது. மேலும், 'புஷ்பா' படத்தில் வில்லனாக நடித்த சுனில் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்தநிலையில், 'ஜப்பான்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தூத்துக்குடியில் தொடங்க இருக்கிறது.படம் 2023 டிசம்பர் மாதம் வெளியாகும் தவறினால் 2024 பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!