மீண்டும் பிரேக்-அப் ஆ? வேறொரு நடிகருடன் நெருக்கம் காட்டும் ராஷ்மிகா!

விஜய் - ராஷ்மிகா நடனமாடும் ரஞ்சிதமே, ஜிமிக்கி பொண்ணு பாடல்கள் உலகம் முழுக்க இப்பவும் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மீண்டும் பிரேக்-அப் ஆ? வேறொரு நடிகருடன் நெருக்கம் காட்டும் ராஷ்மிகா!
X

தமிழ், தெலுங்கு சினிமா தாண்டி ஹிந்தியிலும் கொடி கட்டி பறக்க பல ஏற்பாடுகளைப் பண்ணிக் கொண்டிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

அவரது சினிமா கெரியரின் உச்சத்தில் இருக்கிறார். இவருக்கும் கன்னட இயக்குநர், நடிகரான ரக்சித் ஷெட்டிக்குமான காதல் திருமணம் வரை சென்று பின் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இவர் ரக்சித்தை திரும்பி கூட பார்ப்பது இல்லை. இதனையடுத்து தெலுங்கில் பிரபல நாயகன் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

இன்கேம் இன்கேம் காவலே பாடலின் மூலம் இருவரும் இந்தியா முழுமைக்கும் பிரபலமாகினர். பின்னர் தெலுங்கில் திடீரென்று அசுர வளர்ச்சியடைந்தார் ராஷ்மிகா. பின் தமிழில் விஜய்யுடன் ஜோடியாக நடித்தார். விஜய்யுடன் நடித்த பிறகு உலகம் முழுக்க அறிமுகமானார் ராஷ்மிகா.

விஜய் - ராஷ்மிகா நடனமாடும் ரஞ்சிதமே, ஜிமிக்கி பொண்ணு பாடல்கள் உலகம் முழுக்க இப்பவும் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

விஜய் தேவரகொண்டாவைக் காதலித்து வந்த ராஷ்மிகா வெளிநாடுகளுக்கு பயணம் சென்றதாகவும் பல புகைப்படங்கள் வெளியாகின. அவர்களுக்கு இடையே வெறும் டேட்டிங் மட்டும் இல்லை இருவரும் காதலிக்கிறார்கள். விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்கள் என பலரும் எழுதி வந்தனர்.

இதுகுறித்து ராஷ்மிகாவோ, விஜய்யோ வாய் திறக்கவில்லை. இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே விஜய் - ராஷ்மிகா சந்தித்துக் கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் அவர் வேறொரு நடிகருடன் நெருக்கம் காட்டி, விஜய்யிடமிருந்து தள்ளி இருப்பதுதான் என்கிறார்கள். ராஷ்மிகா தற்போது வெறொரு நடிகரை டேட்டிங் செய்கிறார் என்கிறார்கள். அவரும் தெலுங்கு பின்புலத்தைச் சார்ந்த நடிகர்தான். பெல்லம் கொண்டா ஸ்ரீநிவாஸ் என்ற அந்த நடிகருடன் விரைவில் பொது இடங்களில் வெளிப்படையாகவே சுற்றுவார் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் ராஷ்மிகா மீது பலரும் கோபத்தை வீசி வருகிறார்கள். நம்பியவர்களுக்கு துரோகம் செய்யலாமா என்றும் சிலர் சமூக வலைத்தளங்களில் எழுதி வருகிறார்கள்.

ஆனால் ராஷ்மிகா யாரைக் காதலிக்கிறார் என்பதோ நடிகர்களுடன் அவருக்கு இருக்கும் நட்பு குறித்தோ எந்த தகவலையும் வெளியிடாத நிலையில் நாமே ஒரு முடிவுக்கு வரமுடியாது. இதனால் ராஷ்மிகாவே தன் காதலர் யார் என்பதை தெரிவிக்கும் வரை நாம் யாரையும் முடிவு செய்யமுடியாது.

Updated On: 12 April 2023 11:44 AM GMT

Related News