படையப்பாவிற்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் ஜோடி போடும் ரம்யா கிருஷ்ணன்

படையப்பாவிற்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் ஜோடி போடும் ரம்யா கிருஷ்ணன்
X

ramya krishnan playing main role in jailer movie-ரம்யா கிருஷ்ணன் (பைல் படம்)

Ramya krishnan acting in Jailer movie-நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

ramya krishnan acting in Jailer movie- தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி. என்னதான் சூப்பர்ஸ்டாராக இருந்தாலும் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் தான் யார் என நிரூபிக்கும் தருணத்திற்கு ரஜினி தள்ளப்பட்டுள்ளார். எனவே அடுத்த படத்தில் கட்டாயம் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் அவர் நெல்சன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கின்றார். எப்படி ரஜினி கட்டாய வெற்றியை எதிர்பார்த்து இருக்கின்றாரோ, அதே போல இயக்குனர் நெல்சனும் கட்டாய வெற்றியை நோக்கி ஜெயிலர் படத்தில் பணிபுரிந்து வருகின்றார். அவர் இயக்கிய கடைசி படமான விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால், மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் இருக்கின்றார் நெல்சன்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் துவங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. சமீபத்தில் ரஜினி கூட விரைவில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தில் ரஜினியுடன் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக தகவல் வந்தது.

படையப்பா படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடிக்கவுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் இந்த செய்தி உறுதிபடுத்தாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது ரம்யா கிருஷ்ணன் ஜெயிலர் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் ஆகஸ்ட் மாதம் துவங்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai in future agriculture